டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்து வெஸ்ட் இண்டீஸ்

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 15-வது ஆட்டத்தில் இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Also Read
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை
டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்து வெஸ்ட் இண்டீஸ்

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிராண்டன் கிங் 1 ரன்னிலும், ஷாய் ஹோப் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மியர் 23 ரன்களிலும், ரோஸ்டன் சேஸ் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

Also Read
டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – சீமான்
டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்து வெஸ்ட் இண்டீஸ்

அடுத்து வந்த ஷெர்பேன் ரூதர்போர்டு அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்கள் எடுத்தது. ஷெர்பேன் 76 ரன்களுடனும், ரொமாரியோ ஷெப்பர்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

Also Read
தங்கம் விலை ஒரே நாளில் 2-வது முறையாக உயர்வு… நிலவரம் என்ன..?
டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்து வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்து அணி சார்பில் ஜேமி ஓவர்டன் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் சாம் கரன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

Source link