புதுடெல்லி,
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.
தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மொத்தம் 3 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி பி பிரிவில் இலங்கை – ஓமன் அணிகள் மோதுகின்றன. பல்லெகல்லேவில் நடைபெறவுள்ள இந்த போட்டி காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
சி பிரிவில் அங்கம் வகிக்கும் இத்தாலி – நேபாளம் அணிகள் மும்பையில் பிற்பகல் 3 மணிக்கு மல்லுக்கட்டுகின்றன.
ஏ பிரிவில் உள்ள இந்திய அணி, நமீபியாவை டெல்லியில் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
