திருவனந்தபுரம்,
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மின்விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல துறைகளில் பணிபுரியும் சுமார் 30 கோடி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், 4 தொழிலாளர் சட்டங்களை நீக்கக் கோரி நாடு தழுவிய பொது வேலைநிறுத்ததிற்கு கேரள அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு – கேரளா எல்லையிலுள்ள பாறசாலை அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து தமிழ்நாடு உட்பட கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க வேண்டிய அரசு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை; கேரளா எல்லை வரையே தமிழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பாதியில் நிறுத்தப்படும் பேருந்துகளால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
