மத்திய பட்ஜெட் 2026: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகள் என்னென்ன..?

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனிடையே, ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பஜெட்டை தாக்கல் செய்தார். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றம் விடுமுறை தினமாகும். ஆனால் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) பட்ஜெட் தாக்கல் என்பதால் நாடாளுமன்றம் செயல்பட்டு வருகிறது. 27 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கலின்போது, இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறி வருவதாக கூறிய மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி

* செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.O திட்டம் அறிமுகப்படுத்தப்படும். செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு

* பிரத்யேக ரசாயன பூங்காக்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.

* அரியவகை கனிமம் எடுப்பதற்கான புதிய வழித்தட திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, கேரளாவுக்கு அறிமுகம்.

* விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

* நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படும்.

* காதி, கைத்தறி, கைவினைப் |பொருட்களை வலுப்படுத்த ‘மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.

* மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்.

* பயோ பார்மா எனப்படும் உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

* சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

*சர்வதேச அளவில் ஜவுளித்துறையில் இந்தியா போட்டிபோட புதிய திட்டங்கள்

* ஜவுளித்துறை சார்ந்த திறன்களை வளர்த்தெடுக்க, தொழிற்துறை, கல்வித்துறை இடையே ஒருங்கிணைப்பு

* இயற்கை நூல் உற்பத்திக்கு புதிய திட்டம்; பருத்தி, பட்டு கம்பளி நூல் உற்பத்திக்கு திட்டம்

* புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்

* முக்கிய நகரங்களில் தலா ரூ.5,000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.

* புதிய தேசிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும்; இதற்காக ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு

* நாடு முழுவதும் 7 நகரங்களில் அதிவேக ரயில் தடங்கள் அமைக்கப்படும். மும்பை – பூனே, ஐதராபாத் – சென்னை, புனே – ஐதராபாத் இடையே அதிவிரைவு ரெயில் தடங்கள் உருவாக்கப்படும்

* கோயில் நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* பொதிகை மலையில் சுற்றுச்சுழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்

* உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருந்துகள் ஆராய்ச்சி மையம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைக்கப்படும்

* 3 புதிய ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும்

* வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்

* மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும்

* இந்தியவில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள். 10 சதவீதம் ஆக உள்ள முதலீடு வரம்பு, 24 சதவீதம் ஆக அதிகரிக்கப்படுகிறது.

* தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்

* பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்

* பொதிகை மலை, இமாச்சல், ஜம்மு காஷ்மீரில் டிரக்கிங் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புதிய மரங்கள் நட திட்டம்

* மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 41 சதவீதமாகவே தொடரும்.

* மாநிலங்களுக்கான நிதிப்பகிர்விற்கு ரூ.1.4 லட்சம் கோடி விடுவிக்கப்படும்.

* ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருகிறது.

* திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய டிசம்பரிலிருந்து மார்ச் வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.

* வருமான வரி தாக்கல் செய்யும்போது பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கினாலோ 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்

* வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு கிரிமினல் வழக்கு கிடையாது.

* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து வரி குறைப்பு

* மோட்டார் வாகன விபத்துகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைகளுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

Source link