ஆசிய துப்பாக்கி சுடுதல்: வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர்

புதுடெல்லி,

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா 23 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ஜப்பான் வீரர் டாய் யோஷிகா 31 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கஜகஸ்தான் வீரர் நிகிதா சிர்யுகின் (28 புள்ளி) வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் இந் தியா இதுவரை 41 தங்கம், 19 வெள்ளி, 15 வெண்கலம் என 75 பதக்கங்க ளுடன் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

Source link