திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் 3வது நாளாக இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வண்ணார்பேட்டையில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தின்போது மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவி நிதியை உயர்த்திதரக்கோரி கோசங்கள் எழுப்பப்பட்டன.
இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட சங்கத்தினர் 50 பேரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
