கோவையில் முக்கிய பகுதிகளில் 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை

கோவை,

கோவை மாநகரின் முக்கியப் பகுதிகளில் நாளை (13.02.2026) முதல் வரும் பிப்.15ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதித்து அம்மாநகர போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி நாளை (13.02.2026) நள்ளிரவு முதல் பிப்.15 நள்ளிரவு வரை சுமார் 48 மணி நேரம் ஆளில்லா விமானங்கள் மற்றும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 14ம் தேதி, கோவை குண்டுவெடிப்பு நாள் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இஷா யோகா மையத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வருகையால் சிங்காநல்லூர், சின்னியம்பாளையம், நேரு நகர், ராமநாதபுரம், ரேஸ்கோர்ஸ், வீரகேரளம், வடவள்ளி உள்ளிட்ட முக்கியமான பகுதிகள் ரெட் ஜோன் (RED ZONE) தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Source link