சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கம்

“மகாசிவராத்திரியை முன்னிட்டு சென்னை எழும்பூரிலிருந்து இன்று கன்னியாகுமரிக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது. அதேபோல வரும் 16- ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். மகாசிவராத்திரி மற்றும் விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

மகாசிவராத்திரியை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்க, சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து இன்று இரவு 11.45 மணிக்கு சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்- 06135) புறப்பட்டு நாளை பிற்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரியை அடையும். மறுமாா்க்கத்தில் வரும் 16- ஆம் தேதி இரவு 9.35 மணிக்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணிக்கு சென்னை வந்தடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Source link