சென்னை,
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நமீபியாவை 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், தொடர்ச்சியாக 10 போட்டிகளை வென்ற முதல் அணி என்ற சாதனையை இந்தியா பதிவு செய்துள்ளது.
போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வலுவான இலக்கை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய நமீபியா அணி, இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறியது. நல்ல தொடக்கம் இருந்தபோதிலும் பின்னர் வரிசையாக விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, இலக்கை எட்டத் தவறியது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி-20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 10 போட்டிகளை வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்ததாக வருகிற 15-ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
