எப்போதும் ‘பவுன்சர்கள்’ சுற்றி இருப்பது ஏன்? – பிரியங்கா சோப்ரா வெளிப்படையான விளக்கம்

பிரபல இயக்குனர் எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு நடித்து வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டாலும் ‘பவுன்சர்கள்’ புடைசூழவே பிரியங்கா சோப்ரா வருவது கவனிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “அன்புடன் என்னை அணுகும் ரசிகர்களையும், என் அனுமதியுடன் புகைப்படம் எடுப்பவர்களையும் குறித்து எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், என் அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது எனக்கு விருப்பமில்லை.

ஒருமுறை என் மகளுடன் ஒரு பூங்காவில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தேன். 5 நிமிடங்களுக்குள் எங்களின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி விட்டது. இது என் தனிப்பட்ட பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது. அதனால்தான் ‘பவுன்சர்கள்’ பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்,” என தெரிவித்துள்ளார்.

Source link