நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. அதை தொடர்ந்து கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடித்துள்ளனர். கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படம் மார்ச் 19-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. . இதன் உரிமைகள் விற்பனை படுவேகமாக நடைபெற்று வருகிறது.
இதன் தெலுங்கு உரிமையினை தயாரிப்பாளர் தில் ராஜு ரூ120 கோடிக்கு கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனை முன்வைத்து இணையத்தில் பலரும் இந்த தொகை மிகவும் அதிகம், இதற்கு சாத்தியமில்லை என்று கருத்து தெரிவித்தார்கள். மேலும், படத்தினை பிரபலமாக்குவதற்கு இப்படி செய்கிறார்கள் எனவும் கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விழா ஒன்றில் தில் ராஜுவிடம் கேட்கப்பட்டதற்கு “’டாக்சிக்’ படத்துக்கான தொகை பரிமாற்றம் நடைபெற்றவுடன், வங்கியின் கணக்கு விவரங்களை சந்தேகப்படுவர்களிடம் காட்டுகிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
‘துரந்தர் 2’ படத்தின் வெளியீட்டால் ‘டாக்சிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
