மத்திய பட்ஜெட் 2026 – 27 : ஒரு ரூபாயில் வரவு செலவு எவ்வளவு?

2026-27 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் வரவு செலவு பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. அதுபற்றிய விவரங்கள் வருமாறு:

மத்திய பட்ஜெட்: 1 ரூபாயில் வரவு

நிறுவன வரி – 18 சதவீதம்

வருமான வரி – 21 சதவீதம்

சுங்க வரி – 4 சதவீதம்

மத்திய கலால் வரி – 6 சதவீதம்

கடன் மற்றும் பொறுப்புகள் – 24 சதவீதம்

கடன் அல்லாத மூலதன வரவுகள் – 2 சதவீதம்

வரி அல்லாத வருவாய் – 10 சதவீதம்

ஜிஎஸ்டி மற்றும் பிற வரிகள் – 15 சதவீதம்

மத்திய பட்ஜெட்: 1 ரூபாயில் செலவு

மாநிலங்களின் வரிப் பங்கு – 22 சதவீதம்

நிதி ஆணையம் மற்றும் பிற மானியங்கள் – 7 சதவீதம்

மத்திய அரசு நிதியுதவித் திட்டம் – 8 சதவீதம்

வட்டி செலுத்துதல் – 20 சதவீதம்

மற்ற செலவினங்கள் – 7 சதவீதம்

குடிமைப் பணி ஓய்வூதியம் – 2 சதவீதம்

மத்தியத் துறை திட்டம் – 17 சதவீதம்

முக்கிய மானியங்கள் – 6 சதவீதம்

பாதுகாப்பு – 11 சதவீதம்

Source link