சென்னை,
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 7-ம் தேதி துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வரும் 7ம் தேதி அமெரிக்கா அணியுடன் மோதுகிறது.இந்த நிலையில், இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன் வீரர்களை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கவாஸ்கர் அறிவித்துள்ள இந்திய அணி:
அபிஷேக் சர்மா, இஷான் கிஷான் , சூர்யகுமார் யாதவ் (கேப்டன்) , திலக் வர்மா , ரிங்கு சிங் , ஹர்திக் பாண்டியா , ஷிவம் துபே , அக்சர் படேல் , பும்ரா, அர்ஷிதீப் , வருண் .
