திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பேரின்பராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சிறுமளஞ்சி மாரியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்த மாரீசன் (வயது 23) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ 625 கிராம் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மாரீசனை நேற்று கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 5 கிலோ 625 கிராம் புகையிலை பொருட்களை கைப்பற்றி உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
