டி20 கிரிக்கெட் – ஜிம்பாப்வே அணி வீரரின் புதிய மைல்கல்

ஹராரே:

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ப்ளெஸிங் முசாரபானி 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரான முசாரபானி, சமீபத்திய போட்டியில் தனது 100வது டி20 விக்கெட்டை கைப்பற்றி இந்த மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் ஜிம்பாப்வே டி20 வரலாற்றில் 100 விக்கெட்டுகளை கடந்த மூன்றாவது வீரராக அவர் திகழ்கிறார்.

இந்த பட்டியலில் ரிச்சர்ட் நிகாரவா 111 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். சிக்கந்தர் ராசா 103 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

Also Read
கேப்டன் பொறுப்பை முழுமையாக ஏற்கிறேன்.. ரியான் பராக் பெருமிதம்
டி20 கிரிக்கெட் - ஜிம்பாப்வே அணி வீரரின் புதிய மைல்கல்

ஜிம்பாப்வே அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழும் முசாரபானி, அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது இந்த சாதனைக்கு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Source link