அதிக சம்பளம்.. விஜய்யை ஓவர்டேக் செய்யும் ரஜினிகாந்த்?

சென்னை,

தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக சுமார் 50 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். அடுத்ததாக ‘Thalaivar 174 x KH238’ என்ற படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார். இதில் உலக நாயகன் கமல்ஹாசனும் நடிக்கிறார்.

தமிழ் திரையுலகில் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இரு துருவங்களாக உள்ள ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் மீண்டும் ஒரே திரையில் தோன்றவுள்ளனர். இதனால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Also Read
காதலர் தினத்தை முன்னிட்டு “டிசி” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

அதிக சம்பளம்.. விஜய்யை ஓவர்டேக் செய்யும் ரஜினிகாந்த்?

இந்தப் படத்திற்கு ரஜினிகாந்தின் சம்பளம், விஜய் ‘ஜனநாயகன்’ படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட கூடுதலாக இருக்கும் என்று பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிக்கு இந்தப் படத்திற்கு 225 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் சினிமா வரலாற்றில் ஒரு படத்திற்கு அதிக சம்பளம் வாங்கிய நபர் என்ற பட்டியலில் ரஜினிகாந்த் முதலிடம் பெறுவார் எனத் தெரிகிறது. ‘ஜனநாயகன்’ படத்திற்கு விஜய் ரூ.220 கோடி சம்பளம் பெற்றதாக கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன. எனினும், இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
‘தனுஷ் 55’ படம்: ரூ.35 கோடி வேண்டாம் என்ற மம்முட்டி- பின்னணி என்ன?

அதிக சம்பளம்.. விஜய்யை ஓவர்டேக் செய்யும் ரஜினிகாந்த்?

Source link