அபிஷேக் சர்மா விரைவில் உடல்நலம் பெற வேண்டும்: பாகிஸ்தான் கேப்டன்

கொழும்பு,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தலைநகர் கொழும்புவில் நாளை மறுதினம் நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோத உள்ளன. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா, வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் இரண்டு நாள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதனால் நமிபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் மிகவும் பலவீனமாக இருக்கிறார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் அபிஷேக் சர்மா விளையாடமாட்டார் என்று தெரிகிறது.

இந்த நிலையில், அபிஷேக் சர்மா உடல்நலம் தொடர்பாக பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறியதாவது,

அபிஷேக் சர்மா நாளை விளையாடுவார் என்று நம்புகிறேன், அவர் உடல்நலம் குணமடைய வேண்டும் . சிறந்த வீரர்களுக்கு எதிராக நாங்கள் விளையாட விரும்புகிறோம்.என தெரிவித்தார்.

Source link