திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை

சென்னை,

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. இவர் திமுக பொதுக்கூடங்களில் எதிர்க்கட்சிகளை ஆபாச வார்த்தைகளால் பேசி பரவலாக அறியப்பட்டவர் ஆவார்.

இதனிடையே, கடந்த 2023ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு மற்றும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை ஆபாசமாக பேசி விமர்சனம் செய்தார்.

இது தொடர்பாக கொடுங்கையூர் போலீசில் வழக்கு தொடரப்பட்டது. இந்த ஆபாச பேச்சு தொடர்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் கடந்த 2024ம் தேதி திமுகவில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

அதேவேளை, பாஜக நிர்வாகி குஷ்பு, கவர்னர் ஆர்.என்.ரவியை ஆபாசமாக பேசியது தொடர்பாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது 2023ம் ஆண்டு முதல் சென்னை எழும்பூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கு எழும்பூர் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபனமானது.

இதையடுத்து, சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

Source link