சென்னை,
தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் இரவு 11.31 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்து இரவு தங்கினார்.
திருச்சி வந் தடைந்த அமித்ஷாவை விமான நிலையத்தில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரான அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா., அ.ம.மு.க. மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் அமித்ஷா தங்கியிருந்த ஓட்ட லில் பா.ஜனதா கட்சி மையக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழக பொறுப் பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அதில் பங்கேற்றுள்ளனர். அவர்களிடம் தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்து தேர்தலை தீவிரமாக எதிர் கொள்ள தயாராகுங்கள் என்று அமித்ஷா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
