சென்னை,
இது குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இனி வள்ளலார் நெடுஞ்சாலை. திராவிட மாடல் ஆட்சியில் வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள், ஓராண்டு தொடர் கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா, வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல்நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளைக் கொண்டு சேர்த்திட, வரும் பிப்ரவரி 15-ந் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாடு-2026 நடத்தப்படும்.
மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
