நயினார் நாகேந்திரன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – காங்கிரஸ் எம்.பி. சுதா

சென்னை,

திரைப்பட நடிகையுடன் த.வெ.க. தலைவர் விஜய்யை ஒப்பிட்டு தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழக பெண் எம்.பி.க்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு காங்கிரஸ் எம்.பி.சுதா கணடனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

இனிமேலாவது பொதுவெளியில் இழிவாக விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும், எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ அந்த பெண்ணிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். திராவிட இயக்கத்தில் அரசியல் செய்த காலங்களில் பெண் உரிமை, பெண்கள் சமத்துவத்தை மேடைகளில் பேசியவர் இன்று பெண்களின் மாண்பை குறைக்கும் வகையில் பேசுகிறார் என்றால் அதுதான் ஆர்எஸ்எஸ் பாஜக சானாதன சித்தாந்தத்தின் வெளிபாடு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link