டி20 உலகக் கோப்பை: நேபாளம் அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற 25வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – நேபாளம் அணிகள் மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நேபாளம் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.அந்த அணியில் திபேந்திர சிங் மட்டும் அதிரடியாகி விளையாடி ரன்கள் குவித்தார். அவர் அரைசதமடித்தார்.

மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். நேபாளம் அணியின் பந்துவீச்சை வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் துவம்சம் செய்தனர். 15.2 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.ஷாய் ஹோப் 61 ரன்களும் , ஹெட்மயர் 46 ரன்களும் எடுத்தனர்.

Source link