ஜெர்மனி,
நார்வே நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், எப்ஐடிஇ(FIDE) ப்ரீஸ்டைல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்காவின் பாபியானோ கருவானாவை 2.5-1.5 என்ற கணக்கில் தோற்கடித்து 21-வது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் கிளாசிக்கல், ரேபிட், பிளிட்ஸ் மற்றும் பிஷர் ரேண்டம்/ப்ரீஸ்டைல் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் கார்ல்சன் மொத்தம் 21 உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்ற சாதனையைப் பதிவு செய்துள்ளார். இது அவரது செஸ் வாழ்க்கையில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
கடுமையான போட்டியில் கருவானாவை வீழ்த்திய கார்ல்சன், மீண்டும் ஒருமுறை உலகின் சிறந்த வீரர் என்பதை நிரூபித்தார்.
