நிச்சயமானதை மறைத்து என்னை ‘டேட்டிங்’ அழைத்துச்சென்ற முன்னணி நடிகர் – மம்தா மோகன்தாஸ்

தமிழில் ‘சிவப்பதிகாரம்’. ‘குரு என் ஆளு’, ‘தடையறத் தாக்க’, ‘எனிமி’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை மம்தா மோகன்தாஸ். தற்போது பிரபு ஜெயராம் இயக்கத்தில் அருள்நிதி உடன் ‘மை டியர் சிஸ்டர்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் மம்தா மோகன்தாஸ் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசினார். அதில், “புற்றுநோய் ஆபத்தில் இருந்து மீண்டு வந்த நான் மீண்டும் நடிக்க ஆயத்தமானேன். அப்போது எனக்குள் காதல் தோன்றியது. பிரபல நடிகர் ஒருவருடன் ‘டேட்டிங்’ சென்றேன்.

Also Read
நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு நடிகை திரிஷா கண்டனம்

நிச்சயமானதை மறைத்து என்னை ‘டேட்டிங்’ அழைத்துச்சென்ற முன்னணி நடிகர் - மம்தா மோகன்தாஸ்

ஆனால் அவருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயமானது, பின்புதான் எனக்கு தெரிந்தது. இந்த விஷயம் தெரிந்து இதயம் உடைந்து போனேன். ஒரு பெண்ணின் நம்பிக்கையை சிதைக்க எப்படி இவர்களுக்கு மனம் வருகிறது? என்று வருந்தினேன். இது பற்றி அந்த நடிகரிடம் கேட்டபோது அதை அவர் எளிதாக எடுத்துக்கொண்டார். என்னால் அது முடியவில்லை. எனது முன்னாள் கணவர் பிரஜீத் ஒரு நிகழ்ச்சியில் என்னை பார்த்து திருமணத்திற்கான விருப்பத்தை கேட்டார். என் பெற்றோரிடம் பேசுங்கள் என்று ‘ கூறினேன். அப்படித்தான் எனது திருமணம் நடந்தது. திருமண பந்தத்தின் மீது நம்பிக்கை உண்டு. அது என்றைக்கும் போகாது. இப்போதும் இன்னொரு திருமணம் செய்து கொள்ள தயாராகவே இருக்கிறேன். என்னைப் போலவே புரிதல் கொண்ட நபர் கிடைக்கும் பட்சத்தில் புதிய வாழ்வில் இணையவும் காத்திருக்கிறேன்” என்றார்.

Also Read
கோவை ஈஷா யோகா மைய மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

நிச்சயமானதை மறைத்து என்னை ‘டேட்டிங்’ அழைத்துச்சென்ற முன்னணி நடிகர் - மம்தா மோகன்தாஸ்

Source link