சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 2 ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார்.
கட்சி தொடங்கியது முதல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வரும் சட்டசபை தேர்தலில் களமிறங்க தவெக தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தவெக இன்று 3ம் ஆண்டில் அடியெடுத்து வந்துள்ளது. 3ம் ஆண்டு தொடக்க விழா பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது.
இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். கட்சி தலைமை அலுவலகத்தில் கொடியேற்றும் விஜய் பின்னர் விழாவில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
