தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க (2026-29) பதவிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இதில் தலைவராக ஆர்.கே.செல்வமணி, துணைத்தலைவர்களாக பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், பொதுச்செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இணை செயலாளர்களாக எஸ்.எழில், சரண், சுந்தர்.சி. என்.ஏகம்பவாணன், ஏ.கே.நம்பிராஜன் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக ஆர்.அரவிந்தராஜ், என்.லிங்குசாமி உள்பட 17 பேர் செயற்குழு உறுப்பினர்களாக வும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சினிமா டப்பிங் யூனியன் சங்க தேர்தலில் ராதாரவி தலைமையிலான அணி போட்டியிட்டது. ஆனால் அந்த அணியை எதிர்த்து யாரும் வேட்புமனு செய்யாத நிலையில், வேட்புமனு தாக்கல் செய்திருந்த ராதாரவி அணியை சேர்ந்த 23 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி தலைவராக ராதாரவி, பொதுச்செயலாளராக டி.என்.பி.கதிரவன், பொருளாளராக ஏ.ஷாஜிதா, துணைத்தலைவர்களாக துர்கா சுந்தர்ராஜன், வி.கோபாலகிருஷ்ணன், கே.மாலா, இணைச்செயலாளர்களாக குமரன், இ.எம்.எஸ்.முரளி, பி.சாந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல செயற்குழு உறுப்பினர்களாக 14 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
