துருவ் விக்ரமின் அடுத்த படத்தில் ருக்மிணி, ஸ்ரீலீலா – இயக்குனர் இவரா?

சென்னை,

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் சமீபத்தில் வெளியான பைசன் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, துருவ் விக்ரம் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைய உள்ளதாக தகவல் பரவியது.

இதில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, இந்த திட்டத்தை புதுமுக இயக்குநர் தீபக் ரெட்டி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் “மனசநமஹ” குறும்படத்தின் மூலம் கவனம் பெற்றவர்.

Also Read
’24 மணி நேரமும்…அதற்கு நான் விரும்பவில்லை’ – நடிகை சோபிதா
துருவ் விக்ரமின் அடுத்த படத்தில் ருக்மிணி, ஸ்ரீலீலா - இயக்குனர் இவரா?

இந்த படம் ரொமான்டிக்-காமெடி வகையில் உருவாகும் என்றும், இதில் ஸ்ரீலீலா மற்றொரு கதாநாயகியாக நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. படத்தின் இசையை இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் அமைப்பார் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link