நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு வயதுமூப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். இருப்பினும் அடிக்கடி காய்ச்சல், மூச்சு திணறல் பிரச்சினை காரணமாக நல்லகண்ணு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், நேற்றிரவு நல்லகண்ணுவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மூத்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் கண்காணிப்பில் நல்லகண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Source link