“எங்கள் கண்ணீரில் சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள்” – நடிகை சுப்ரிதா வேதனை

ஐதராபாத்,

நடிகை சுரேக்கா வாணியின் மகளும் நடிகையுமான சுப்ரிதா, தனது புதிய படமான ‘அமராவதி கி அன்வக்கம்’ புரமோஷன் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகள் குறித்து மனம் திறந்து பேசினார்.

தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து பரவும் வதந்திகள் குறித்து அவர் பேசும்போது, “சிலர் எங்களைப் பற்றி பொய்யான கதைகள் எழுதி, எங்கள் கண்ணீரில் பணம் சம்பாதிக்கிறார்கள்” என்று வேதனை தெரிவித்தார். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்யும் அளவுக்கு மனஅழுத்தம் ஏற்பட்டதாகவும், ஆனால் தற்போது எதிர்மறை விமர்சனங்களை சகித்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டதாகவும் கூறினார்.

Also Read
“சேயோன்”- சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோ வெளியீடு
“எங்கள் கண்ணீரில் சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள்” - நடிகை சுப்ரிதா வேதனை

மேலும், தனது தாய் மறுமணம் செய்ய உள்ளதாக வெளியான வதந்திக்கு பதிலளித்த அவர், “அது என் ஆசை மட்டுமே, அம்மாவுக்கு அத்தகைய எண்ணம் இல்லை” என்று தெளிவுபடுத்தினார்.

Source link