சென்னை,
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் புதிய சாதனை உருவாகியுள்ளது. இந்த தொடரில் இதுவரை 6 முறை 200க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக 200+ ஸ்கோர் இடம்பெற்ற தொடராக 2026 புதிய சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் 5 முறை 200+ ஸ்கோர் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதேபோல் 2016 மற்றும் 2024 ஆண்டுகளில் நடந்த தொடர்களில் தலா 4 முறை 200க்கும் மேற்பட்ட ஸ்கோர் எட்டப்பட்டது. தற்போது 2026 தொடர் அந்த சாதனைகளை முறியடித்துள்ளது.
இந்த தொடரில் அணிகள் பவர் பிளே ஓவர்கள் மற்றும் இறுதி ஓவர்களில் வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடுவதால் பெரிய ஸ்கோர்கள் எளிதில் எட்டப்படுகின்றன. பந்து வீச்சாளர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. இதன் காரணமாக எதிர் வரும் தொடர்களில் மேலும் புதிய சாதனைகள் உருவாகும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
