சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் இன்று (17-2-2026) சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரால் தாக்கல் செய்யப்படுகின்றன.
பொதுவாக, இடைக்கால பட்ஜெட் என்பது அரசின் சாதனைகளை தெரிவிக்கும் அறிக்கையாக இருக்கும். மேலும், பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் இடைக்கால நிதிக்கு ஒப்புதல் கோரும் அறிக்கையாகவும் இருக்கும். இதுதான் இதுநாள் வரையில் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபாகும்.
எனவே, இடைக்கால பட்ஜெட்டில், புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடுவது மரபு இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
