குறிப்பாக இல்லத்தரசி திட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இல்லத்தரசிகளுக்கு 8000 ரூபாய்க்கு கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பல திட்டங்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து பலர் பேசிக்கொண்டு இருக்கும் அதே நிலையில் திமுக -அதிமுக -தவெக ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை மக்கள் ஒப்பிட்டு பார்க்க துவங்கிவிட்டனர்.
இந்நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தவெக மற்றும் திமுகவும், தவெகவின் தேர்தல் அறிக்கைகளை மற்றவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கையை தற்போது அதிமுக விமர்சனம் செய்து பதிவிட்டு இருக்கின்றனர். காப்பி அடித்து மாட்டிக்கொண்டார் ஸ்டாலின் என அதிமுக விமர்சனம் செய்து பதிவு போட்டுள்ளது.
அவர்கள் குறிப்பிட்டது, ஆட்சியில் தான் எடப்பாடியின் திட்டங்களுக்கு ஸ்டாலின் ஸ்டிக்கர் ஓட்டினார் என்று பார்த்தால் தேர்தல் அறிக்கையிலும் அதே செய்திருக்கின்றார் என்றனர் அதிமுகவினர். மகளிருக்கு மாதம் 2000 ருபாய்,அனைவருக்கும் அம்மா வீடு திட்டம், நெல் -கரும்பு கொள்முதல் வேலை உயர்வு திட்டம், அதுமட்டுமல்லாமல் உதவித்தொகை உயர்வு மீன்பிடி தடைகால நிவாரண திட்டம், லேப்டாப் திட்டம், மருத்துவ திட்டங்கள் என அனைத்தையுமே காப்பி பேஸ்ட் செய்திருக்கின்றனர்.
கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் அரசு பணியிடங்களை திமுக எப்படி நிரப்பினார்கள் என்பது தமிழ்நாடே அறியும். ஆனால் தற்போது மீண்டும் அதே உருட்டை உருட்டியிருக்கின்றனர். நாங்கள் 10000 ரூபாயை பொருளாதார உதவித்தொகையாக வழங்குவதாக அறிவித்தோம். மேலும் விலையில்லா fridge திட்டத்தையும் அறிவித்தோம்.
அதையெல்லாம் பார்த்துப்போன முக ஸ்டாலின் பதறிவிட்டார். எனவே தான் எதையாவது சொல்லவேண்டும் என்பதற்காக பரிசு கூப்பன் என்ற புதிய உருட்டை உருட்டினார். இந்நிலையில் திமுகவின் இந்த தேர்தல் அறிக்கை எல்லாம் களத்தில் பவர் ஸ்டார் போல ஒரு காமெடியாக தான் பார்க்கப்படும் என அதிமுக கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றனர். இவ்வாறு திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியான உடனே அதிமுக தங்களின் விமர்சனங்களை துவங்கிவிட்டனர்.
இந்நிலையில் ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கைகளை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது இயல்பு தான். எனவே பிற கட்சிகள் சொல்வதை விட மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பது குறித்து தான் பார்க்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களின் கருத்து என்ன ? தேர்தல் அறிக்கை பொதுமக்களை திருப்தி செய்ததா ? என்பது தான் முக்கியம்.
அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்…யார் இந்த தனபால்?
இதையும் மீறி கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட வாக்குறுதிகளை எந்தளவிற்கு அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றனர் என்பதும் மிக முக்கியமான ஒன்றாகும். இதையெல்லாம் பொதுமக்கள் அலசி ஆராய்ந்து பார்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
https://x.com/AIADMKOfficial/status/2038258907546870093
