Admk Alliance,அதிமுக கூட்டணியில் இணைந்த சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம்..ஒரு தொகுதியை ஒதுக்கியதாக தகவல் – singatamizhagar party leader bharathan met eps and joined admk alliance

அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு எல்லாம் முடிவடைந்து எந்தெந்த தொகுதிகள் என அறிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய அம்சங்கள்:

அதிமுக கூட்டணியில் புது கட்சி

ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது

new party in admk alliance
அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதி மற்றும் எந்தெந்த தொகுதிகள் என நேற்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு அதிகப்படியாக 27 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த முறையை விட அதிகமான தொகுதிகளாகும். அதனைத்தொடர்ந்து அன்புமணி தரப்பு பாட்டாளி மக்கள் கட்சிக்கு இம்முறை 18 இடங்களை ஒதுக்கிய அதிமுக டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு 11 தொகுதிகளை வழங்கியிருக்கின்றனர்.பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஐந்து தொகுதிகளை பெற்றுள்ளது. இதைத்தவிர இந்திய ஜனநாயக கட்சி இரண்டு தொகுதிகளையும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை அதிமுக வழங்கியிருக்கின்றனர். மேலும் அதிமுக கட்சிகளுக்கான தொகுதிகளையும் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து மயிலாப்பூர் தொகுதியில் இருந்து தனது பரப்புரையை துவங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் இன்று புதிதாக அதிமுக கூட்டணியில் ஒரு கட்சி இணைந்திருக்கிறது. சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் என்ற கட்சி அதிமுகவில் இணைவதாக அறிவித்து இருக்கின்றனர். சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.பரதன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கூட்டணியில் இணைந்துள்ளார்.
இதையடுத்து புதிதாக இணைந்திருக்கும் சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் கட்சிக்கு அதிமுக ஒரு தொகுதியை ஒதுக்க முன்வந்து இருப்பதாக தெரிகின்றது. மேலும் அதிமுக கூட்டணியில் புதிதாக இணைந்த சிங்கத் தமிழர் முன்னேற்ற கட்சிக்கு எந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அநேகமாக ஸ்ரீரங்கம் அல்லது மண்ணச்ச நல்லூர் ஆகிய தொகுதிகளில் ஒரு தொகுதியை எங்களுக்கு ஒதுக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சிதமுக கட்சி தலைவர் பரதன் தெரிவித்திருக்கின்றார். அப்படி அவர்கள் ஒதுக்கும் தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்தார் பரதன். இவ்வாறு தொகுதிகளை எல்லாம் பிரித்துவிட்டு பரப்புரையை துவங்கியிருக்கும் நிலையில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி வந்து இணைந்திருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முதல் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரையை துவங்கியிருக்கின்றார். இன்றும் கூட தனது பரப்புரையை நிகழ்த்த உள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதுவும் இந்த சட்டமன்ற தேர்தலுக்கான முதல் பரப்புரையை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் இருந்து துவங்கியிருக்கின்றார். இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.அநேகமாக மைலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பாக தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நேற்று எடப்பாடி பழனிசாமியுடன் பரப்புரையில் தமிழிசை சௌந்தர்ராஜனும் கலந்துகொண்டார். ஆனால் கட்சியில் இருந்து அறிவிப்பு வரவேண்டும். அவர்கள் அறிவிக்கும் தொகுதியில் தான் நான் போட்டியிடுவேன் என கூறினார் தமிழிசை. இதனைத்தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீட்டில் எந்த வித மனக்கசப்பும் இல்லை என்றே சொல்லப்படுகின்றது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் முதலில் அதிருப்தியில் இருந்ததாகவும், அதன் பிறகு அவருக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கிய நிலையில் அவரும் சமரசம் ஆகிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. தற்போது புதிதாக சிங்க தமிழர் முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியும் இணைந்திருக்கின்றனர்.

அன்புமணி அதிமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார், ராமதாஸ் சிக்னல் என்ன_ கூட்டணி யாருடன்_

அவர்களுக்கும் அதிமுகவில் தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. இதன் மூலம் எங்கள் கூட்டணியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம். ஆனால் திமுக கூட்டணியில் அப்படி இல்லை என அதிமுகவினர் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருவதையும் பார்க்க முடிகின்றது.