இதனைத்தொடர்ந்து திமுக சார்பாக ஓபிஎஸ் போட்டியிடுவாரா ? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஓபிஎஸ் அதுகுறித்து எதுவுமே பேசாமல் இருந்து வந்தார். இந்த சமயத்தில் தான் போடி தொகுதியை முதலமைச்சர் முக ஸ்டாலின் ஓபிஎஸ்ஸிற்கு வழங்கினார். இம்முறை அவரது சொந்த தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட இருக்கின்றார் ஓபிஎஸ். முதல்முறையாக திமுக சார்பாக ஓபிஎஸ் போட்டியிட இருப்பதால் அவருக்கு வரவேற்பு இருக்குமா ? இருக்காதா ? என்ற கேள்வியும் ஒருபக்கம் போய்க்கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் போடி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் நாராயணசாமி ஓபிஎஸ் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியது, ஓபிஎஸ் திமுகவில் இணைந்துவிட்டார். கடந்த பல வருடங்களாக ஓபிஎஸ் அதிமுகவில் இருந்தார். மக்கள் அவருக்கு வாக்களித்தனர். சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பிறகு அமைச்சராக பதவி ஏற்று முதலமைச்சராகவும் இருந்தார் ஓபிஎஸ்.
ஆனால் இன்று அதிமுக கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு திமுகவில் இணைந்துவிட்டார். இதனால் போடி மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். ஓபிஎஸ் ஜெயலலிதா அம்மாவிற்கு துரோகம் செய்துவிட்டார். கட்சிக்கு விசுவாசமாக அவர் இல்லை, கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் வெறியோடு உணர்ச்சிவசப்பட்டு இருக்கின்றனர். இதெல்லாம் எனக்கு சாதகமாக அமைந்துவிட்டது. கண்டிப்பாக மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றிபெறுவேன் என்றார் நாராயணசாமி.
இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் ஓபிஎஸ் அதிமுக சார்பாக போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் முதல்முறையாக திமுக சார்பாக அவர் போட்டியிடுவதால் முன்பு இருந்த வரவேற்பு தற்போதும் இருக்குமா ? என்பது தான் கேள்வியாக இருந்து வருகின்றது. ஆனால் அரசியல் களத்தில் ஓபிஎஸ் அவர்களின் வருகை திமுகவை தென் மாவட்டங்களில் மேலும் வலுப்பெற செய்திருப்பதாக சொல்லப்படுகின்றது.
ஓபிஎஸ் திமுகவில் இருந்தாலும் அவருக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கின்றனர் என கருத்துக்கள் வருகின்றன. ஏனென்றால் ஓபிஎஸ் ஐ அதிமுக கட்சியில் இருந்தே நீக்கிவிட்டனர். அதனைத்தொடர்ந்து தான் அவர் திமுகவில் இணைந்திருக்கிறார். எனவே ஓபிஎஸ்க்கு அதிமுக தான் துரோகம் செய்ததாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சொல்கின்றனர். அதே சமயம் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த சிலர் அவரின் இந்த முடிவை எதிர்த்து அவரை விட்டு விலகிவிட்டனர்.
மேலும் ஓபிஎஸ் உடன் திமுகவில் இணைந்த அவரின் ஆதரவாளர் அய்யப்பன் ஓபிஎஸ் தன்னை கைவிட்டதாக கூறி சசிகலா கட்சியில் இணைந்துவிட்டார். ஓபிஎஸ் எனக்கு சீட் வாங்கி தருவார் என நினைத்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார் என அய்யப்பன் கூறிவிட்டு சசிகலா கட்சியில் இணைந்திருக்கிறார்.
இதுபோல ஓபிஎஸ் மீது சில சர்ச்சைகளும் இருக்க தான் செய்கின்றது. ஆனாலும் போடி தொகுதியில் கடந்த மூன்று முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்றவர் தான் ஓபிஎஸ். அதே வெற்றியை அவர் மீண்டும் பெறுவார் என்பது தான் பெரும்பாலானோரின் கருத்தாக இருந்து வருகின்றது. இந்த சமயத்தில் தான் அதிமுகவின் போடி வேட்பாளராக களமிறங்கும் நாராயணசாமி, ஓபிஎஸ் மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்கின்றார்.
ஆனால் ஓபிஎஸ் கடந்த பல வாரங்களாக போடி உட்பட தென் மாவட்டங்களில் திமுகவிற்காக பரப்புரை செய்து வருகின்றார். அதற்கு மக்கள் மாபெரும் வரவேற்பை தருவதாக சொல்லப்படுகின்றது. இதையெல்லாம் வைத்து பார்க்கையில் ஓபிஎஸ் மீண்டும் வெற்றிபெறப்போவது உறுதி என்றே சொல்லப்படுகின்றது.
Anbumani vs Ramadoss: யார் கையில் PMK? முக்கிய அரசியல் விவாதம்
இந்நிலையில் திமுகவில் ஓபிஎஸ் அவர்களுக்கு மட்டும் தான் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அவரின் மகன் மற்றும் ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக தான் அவரை நம்பி திமுகவில் இணைந்த ஐயப்பன் கடும் அதிருப்தியில் அவரை விட்டு விலகிவிட்டார். இதெல்லாம் ஓபிஎஸ் அவர்களுக்கு பாதகமாக அமையுமா ? என்ற கேள்வியும் ஒருபக்கம் இருக்க தான் செய்கின்றது.
