Annamalai About Thirumavalavan,அரசியலில் சகிப்புத்தன்மை வேண்டும்..திருமாவளவனுக்கு அண்ணாமலை அட்வைஸ் – annamalai advice to vck leader thirumavalavan about the latest controversy

இந்த முறை சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிடவில்லை என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு தீவிரமாக வாக்கு சேகரித்து பரப்புரை செய்து வருகின்றார். கரூர், கோவை என பல இடங்களில் தீவிரமான பரப்புரை மேற்கொண்டு வருகின்றார் அண்ணாமலை. அப்போதெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிவாய்ப்பு குறித்து பேசும் அண்ணாமலை திமுக கூட்டணியையும் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றார்.

அதாவது முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி பரப்புரையில் பேசி வருவதாக கூறினார் அண்ணாமலை. கனிமொழியும் கூட தவறாக தான் பேசுகின்றார். அதற்கெல்லாம் தரம்தாழ்ந்து பதிலளிக்க நான் விரும்பவில்லை என கூறினார் அண்ணாமலை.

மேலும் கரூர், கோவை போன்ற இடங்களில் பரப்புரை செய்யும்போது எங்களின் வெற்றிவாய்ப்பு உறுதியாக தெரிவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார் அண்ணாமலை. அப்போது செய்தியாளர் ஒருவர் திருமாவளவன்சமீபத்தில் ஒரு தொண்டரை அறைந்த விஷயம் குறித்து அவரிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை ,அரசியல் தலைவர்களுக்கு சகிப்புத்தன்மை வேண்டும், அது மிகவும் அவசியம். சகிப்புத்தன்மை குறைந்தால் பல பிரச்சனைகள் வரும்.

மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனர். இதே போல தான் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் மெட்ரோ ரயிலில் ஒருவரை அறைந்தார். திமுகவை சேர்ந்தவர்கள் பலர் இதுபோல செய்கின்றனர். திருமாவளவன் அவர்கள் எப்போதும் பொறுமையாக இருப்பார். அவரே இந்த தவறை செய்கின்றார்.எனவே சகிப்புத்தன்மை வேண்டும் என்பது தான் என்னுடைய கருத்து என கூறினார் அண்ணாமலை.

இந்நிலையில் சமீபத்தில் திருமாவளவன் தேனி மாவட்டத்தில் பரப்புரை செய்து வந்தார். அப்போது ஒரு தொண்டர் வாகனம் மீது ஏறி போட்டோ எடுக்க முயன்றார். அதற்கு திருமாவளவன் அந்த தொண்டரை அறைந்துவிட்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் சில கண்டனங்கள் எழுந்தன. என்னதான் இருந்தாலும் ஒரு தொண்டரை சகமனிதனை கைநீட்டி அடித்திருக்க கூடாது, பொறுமையாக எடுத்து சொல்லியிருக்க வேண்டும் என மக்கள் பலர் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

அதைப்போல பாஜகவின் அண்ணாமலையும், தலைவர்களுக்கு சகிப்புத்தன்மை வேண்டும், எப்போதும் பொறுமையாக இருக்கும் திருமாவளவன் இந்த தவறை செய்திருக்கின்றார் என கூறியுள்ளார். இவ்வாறு திருமாவளவன் தொண்டரை அடித்தது குறித்து அண்ணாமலை பேசியதோடு மட்டுமல்லாமல் திமுகவினர் தொடர்ந்து இப்படி தான் செய்கின்றனர் என குற்றம்சாட்டி உள்ளார்.

இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் ஜனநாயகன் படம் ரிலீசுக்கு முன்பே இணையத்தில் லீக்கானதற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீது குற்றம்சாட்டினார். அதற்கு அண்ணாமலை கடும் கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றார். ஆதவ் அர்ஜுனா அவர்கள் எல்.முருகன் மீது தேவையில்லாத குற்றசாட்டுகளை முன் வைக்கின்றார். ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது மிகப்பெரிய தவறு. யாரும் அதனை இணையத்தில் பார்க்காதீர்கள்.

திரையரங்கில் வெளியான பிறகு பாருங்கள். நானும் ஜனநாயகன் படம் திரையில் வெளியான பிறகு பார்ப்பேன். ஆனால் அரசியல் லாபத்திற்காக எல்.முருகன் மற்றும் பாஜக பெயரை இழுக்காதீர்கள். இது அரசியல் அநாகரீகம் என பேசினார் அண்ணாமலை. இந்நிலையில் அண்ணாமலை பரப்புரை செய்வதை எல்லாம் பார்க்கையில் அவர் முழு மூச்சாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற வேண்டும் என முயற்சிக்கின்றார். ஆனால் அண்ணாமலையின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இல்லை, அவருக்கும் பாஜகவிற்கும் கருத்து வேறுபாடு என்றெல்லாம் செய்திகள் வந்தன.

மேலும் பிரதமர் மோடியின் வருகைக்கு கூட அண்ணாமலை வராமல் புறக்கணித்துவிட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது அண்ணாமலை தீவிரமாக பரப்புரை செய்து வருகின்றார். எனவே தற்போது கட்சிக்குள் எந்த பிரிவினையும் பிரச்சனையும் இல்லை என்பது அண்ணாமலையின் பரப்புரையை பார்க்கும்போது தெரிகின்றது. அப்படியே பிரச்சனை இருந்திருந்தாலும் தற்போது சுமுகமான முடிவு எட்டப்பட்டு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Source link