ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த ஐயப்பன் அவருடன் திமுகவில் இணைந்தார். தற்போது உசிலம்பட்டி தொகுதியில் சீட் கிடைக்காததால் சசிகலா கட்சியில் இணைந்த ஐயப்பன் ஓபிஎஸ் ஐ கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார்
முக்கிய அம்சங்கள்:
சசிகலா கட்சியில் இணைந்த ஐயப்பன்
ஓபிஎஸ் மீது விமர்சனம்
திமுகவில் இருந்து உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட தொண்டர்களோடு வந்து சின்னம்மா கட்சியில் இணைகின்றோம். உசிலம்பட்டி தொகுதியில் சின்னம்மாவின் தலைமையில் போட்டியிட நாங்கள் கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கையை ஏற்று உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பினை எனக்கு சின்னம்மா வழங்கியிருக்கிறார். இந்நிலையில் நேற்று தான் ஐயப்பன் ஓபிஎஸ்மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்..
ஓபிஎஸ் தனக்கு உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட சீட் வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்ததாகவும், ஆனால் தற்போது உசிலம்பட்டி தொகுதியை திமுக காங்கிரஸ் வேட்பாளருக்கு கொடுத்ததாகவும் கூறினார். ஓபிஎஸ் ஐ நம்பி இருந்த எங்களை அவர் கைவிட்டுவிட்டார் எனவும் தெரிவித்தார். இருந்தாலும் எங்கள் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என நேற்று தான் தெரிவித்தார் ஐயப்பன்.
ஆனால் இன்று திடீரென சசிகலாவின் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இப்படி ஒரே நாளில் தன் முடிவை மாற்றியதற்கு என்ன காரணம் என அவரே கூறியிருக்கின்றார். அதாவது திமுக கட்சியில் அவர் இணைந்து ஒரு மாதகாலம் ஆகிவிட்டது.ஆனால் இந்த ஒரு மாதத்தில் திமுக நிர்வாகிகளை அவரால் தொடர்புகொள்ளவே முடியவில்லையாம். கட்சியில் இணைந்தோம் என்று தான் இருக்கின்றது. ஆனால் எங்களிடம் எந்த ஒரு பொறுப்பும் வேலையும் அவர்கள் கொடுக்கவில்லை.
இதனால் தான் நேற்று பேட்டியும் கொடுத்து பார்த்தோம். அதற்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. அதன் காரணமாக தான் சின்னம்மாவின் கட்சியில் இணைந்திருக்கின்றோம் என்றார் ஐயப்பன். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் ஐ கடுமையாக விமர்சித்து பேசினார் ஐயப்பன்.
அதிமுக என்ற கட்சி அழிவு பாதைக்கு செல்ல ஓபிஎஸ் தான் காரணம். அவர் தான் சகுனி என்றெல்லாம் விமர்சித்து பேசினார் ஐயப்பன்.மேலும் அவரை நம்பியிருந்த என்னை நடுகாடாவில் போட்டுவிட்டார் ஓபிஎஸ்.சின்னம்மா தான் என்னை தற்போது காப்பாற்றியிருக்கின்றார் என்றார் ஐயப்பன்.
இந்நிலையில் நேற்று ஐயப்பன் கூறும்போது, ஓபிஎஸ் மீது அதிருப்தி இருந்தாலும் தொடர்ந்து திமுகவிற்காக பாடுபடுவோம் என கூறினார். ஆனால் ஐயப்பன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியும் அவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை, ஓபிஎஸ் தரப்போ அல்லது திமுக தரப்போ அவரிடம் பேசவில்லை என்பதற்காக தான் ஒரே நாளில் ஐயப்பன் தனது முடிவை மாற்றி சசிகலா கட்சியில் இணைந்திருக்கிறார் என தெரிகின்றது.
இந்நிலையில் உசிலம்பட்டி தொகுதியில் ஐயப்பனுக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு உள்ளது. அங்கு இருக்கும் மக்கள் அவருக்கு ஆதரவாக உள்ளார்கள். இதற்கிடையில் அவர் திமுகவில் இருந்தும் ஓபிஎஸ்ஐ விட்டும் சசிகலாகட்சியில் இணைந்திருக்கிறார். எனவே தற்போதும் அவருக்கு அதே ஆதரவு இருக்குமா ? மீண்டும் உசிலம்பட்டியில் வெற்றிபெறுவாரா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அன்புமணி அதிமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார், ராமதாஸ் சிக்னல் என்ன_ கூட்டணி யாருடன்_
இத்தனை ஆண்டுகளாக ஓபிஏஸிவ் ஆதரவாளராக இருந்து வந்த ஐயப்பன் தற்போது அவர் மீது அதிருப்தி கொண்டு சசிகலா கட்சியில் இணைந்திருக்கிறார். இதனால் பதக்கம் யாருக்கு ? என்பது போக போக தான் தெரிய வரும். ஆனால் உசிலம்பட்டி தொகுதியில் பெரும்பாலும் ஐயப்பன் வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
