தவெக தலைவர் விஜய் நேற்று பெரம்பூர் பரப்புரையில் வாக்கிற்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் என பேசியதை CPI மாநில செயலாளர் வன்மையாக கண்டித்து பேசியிருக்கிறார்.நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்
முக்கிய அம்சங்கள்:
விஜய் பேச்சு கண்டிக்கத்தக்கது
வீரபாண்டியன் கண்டனம்
தற்போது விஜய்யின் இந்த கருத்திற்கு CPI மாநில செயலாளர் வீரபாண்டியன்கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். அவர் கூறுகையில், தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரான கருத்தை விஜய் பேசியிருக்கிறார்.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விஜய்யின் இந்த கருத்துக்களை கண்டித்து இருக்கின்றோம். மேலும் தேர்தல் ஆணையத்திடமும் இதனை எடுத்துசென்றுள்ளோம். ஒரு அரசியல் கட்சியின் தலைவரான விஜய் இப்படி பேசியிருக்கக்கூடாது. பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் என தவறான கருத்தை கூறியிருக்கின்றார்.
இது தேர்தல் முறைகளை சிதைப்பது போன்ற செயலாகும். வாக்குக்காக பணம் கொடுப்பதும் வாங்குவதும் மிகப்பெரிய தவறு. அதனை ஊக்குவைப்பதை போல பேசியிருக்கிறார் விஜய். இதனை CPI சார்பாக நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார். மேலும் அவர் திரைப்படத்துறையில் தனக்கு கிடைத்த புகழை வாக்குகளாக மாற்ற முயற்சிக்கின்றார் விஜய். தற்போது தான் அவர் அரசியலில் முதலடியை எடுத்து வைக்கின்றார்.
நாட்கள் செல்ல செல்ல அவர் தேர்தல் என்றால் என்ன ? அரசியல் என்றால் என்ன ? என்பதனை கற்றுக்கொள்வார். மேலும் தவெக என்பது புதிதாக துவங்கியிருக்கும் கட்சி. எனவே அவர்கள் தடுமாறுவது இயல்பான ஒன்று தான். மேலும் தற்போது அவர்களுக்காக கூடும் கூட்டமெல்லாம் வாக்குகளாக மாறாது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் பேசினார் வீரபாண்டியன்.இவ்வாறு விஜய்யின் கருத்துக்களுக்கு கண்டனங்களை தெரிவித்து பேசியிருக்கிறார் வீரபாண்டியன்.
இதுவரை விஜய்யின் பரப்புரை நடைபெற்ற முறை குறித்து தான் சர்ச்சை எழுந்து வருகின்றது. ஆனால் தற்போது விஜய் பேசிய கருத்துக்களுக்கும் கண்டனங்கள் வருகின்றன. இந்நிலையில் விஜய் இதே கருத்தை பல மாதங்களுக்கு முன்பே கூறியிருக்கின்றார். வாக்குக்காக பணம் கொடுத்தால் அதனை வாங்கிக்கொண்டு அவர்களின் காதில் விசில் ஊதி அனுப்பிவிடுங்கள் என பேசியிருந்தார் விஜய். ஆனாலும் அப்போது இந்த கருத்திற்கு பெரிதாக எந்த ஒரு கண்டனங்களும் வரவில்லை.
விஜய் சீட் பேர அரசியல் செய்ய மாட்டார்! மக்கள் நினைப்பது இது தான்_
இருப்பினும் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பரப்புரை போய்க்கொண்டு இருக்கும் நேரத்தில் விஜய் இதுபோன்ற கருத்துக்களை கூறியிருப்பது தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாக்குக்காக பணம் கொடுப்பது தேர்தல் ஆணையின்படி குற்றமாகும். அப்படி இருக்கும்போது விஜய் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள் என கூறியது கண்டனங்களை பெற்று வருகின்றது. அதே சமயம் தவெகவினர், அப்படியென்றால் யாருமே பணம் கொடுத்து வாக்குகளை கேட்கவில்லையா ? என்றும் பதில் கேள்வி கேட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
