முன்னாள் சபாநாயகர் தனபாலை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் சந்தித்துள்ளார். அவிநாசி தொகுதியில் போட்டியிடும் எல். முருகன் அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தனபாலை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்
முக்கிய அம்சங்கள்:
தனபால் -எல்.முருகன் சந்திப்பு
வாழ்த்து பெற்ற மத்திய இணையமைச்சர்
இதனால் கடும் விரக்தியடைந்த தனபால் அவர்களின் மகனான லோகேஷ் தனபால் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தார். என்னை அதிமுகவினர் கண்டுகொள்ளாததால் தான் விரக்தியில் என் மகன் தவெகவில் இணைந்தார் என வெளிப்படையாக பேசினார் தனபால். இருந்தாலும் நான் எப்போதும் அதிமுகவில் தான் இருப்பேன். என் ஆதியும் அந்தமும் அதிமுக தான் என உருக்கமாக பேசினார் தனபால்.
இவ்வாறு மக்களின் செல்வாக்கை பெற்று, ஜெயலலிதா அவர்களின் நன்மதிப்பை பெற்ற தனபால் அதிமுக மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் அதிமுகவிற்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா ? அவிநாசி தொகுதியை அதிமுக கூட்டணி இழந்துவிடுவார்களா ? என்ற கேள்வி எழுந்தது. மேலும் தனபால் போன்ற ஒரு மூத்த அரசியல்வாதியை அதிமுக சரியாக நடத்தவில்லை என்றும் குற்றசாட்டுகள் முன் வைக்கப்பட்டன.
இந்நிலையில் அவிநாசி தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இன்று தனபாலை நேரில் சந்தித்திருக்கிறார்.அவிநாசி தொகுதியின் வெற்றிக்காக தனபாலிடம் நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார் எல்.முருகன். இதனைத்தொடர்ந்து தனபால் அவர்களை அதிமுக கண்டுகொள்ளவில்லை, அவருக்கு சீட் வழங்கவில்லை என குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த சமயத்தில் மத்திய இணையமைச்சரும் அவிநாசி வேட்பாளருமான எல்.முருகன் தனபாலை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கின்றார்.
இந்த சந்திப்பு எல்.முருகனுக்கு வாக்குகளாக மாறுமா ? என்பது கேள்வியாக இருக்கின்றது. ஏனென்றால் இத்தனை நாட்கள் தனபாலை அதிமுகவோ அவர்களுடன் கூட்டணி வைத்த கட்சிகளோ பார்க்கவில்லை. குறிப்பாக அதிமுகவினர் தனபால் உடல்நிலை சரியில்லாதபோதும் அவர்களை கண்டுகொள்ளவில்லை. ஆனால் தேர்தல் நேரம் நெருங்கியிருக்கும் நிலையில் தற்போது தான் தனபால் அவர்களின் நினைவிற்கு வந்தாரா ? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் முன் வைக்கப்படுகின்றது.
மேலும் ஒரு சில தினங்களுக்கு முன்பு தான் தனபால் தனக்கு சீட் கிடைக்காதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவிநாசி தொகுதியில் கடந்த இருமுறை போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களின் செல்வாக்கை பெற்றவர் தான் தனபால். அப்படி இருக்கையில் அவருக்கு சீட் வழங்காமல் இருப்பது அதிமுக செய்த மிகப்பெரிய தவறு என தனபால் ஆதரவாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த சமயத்தில் எல்.முருகன் தற்போது தனபாலை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கின்றார். இந்த சந்திப்பு தனபாலையும் அவரது ஆதரவாளர்களையும் சாந்தமாக்குமா ? தனபாலும் அவரது ஆதரவாளர்களும் எல்.முருகனுக்கு ஆதரவு தருவார்களா ? என்பது தான் மிகப்பெரிய கேள்வி. கடந்த இருமுறை தனபாலை வெற்றிபெற செய்தார்கள் அவிநாசி தொகுதி மக்கள்.தற்போது அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால் கண்டிப்பாக அவர்கள் அதிருப்தியில் இருப்பார்கள்.
திமுக கூட்டணியில் இருந்து பாஜகவுக்கு செல்லும் கட்சி எது? திருமாவளவன் பேட்டி ..!
அதுமட்டுமல்லாமல் அதிமுக ஆதிக்கம் செலுத்தி வரும் தொகுதியான அவிநாசியை அவர்கள் பாஜகவிற்கு ஒதுக்கியதும் பேசும்பொருளானது. இவ்வாறு அவிநாசி தொகுதி குறித்து பல பேச்சுக்கள் போய்க்கொண்டு இருக்கும் நிலையில் தற்போது தனபால் மற்றும் எல். முருகனின் சந்திப்பு அந்த தொகுதியில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
