எடப்பாடி பழனிச்சாமி தனது பரப்புரையில் மீண்டும் தேமுதிகவை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார். தேமுதிக கட்சியின் வாக்கு சதவீதத்தை வைத்து அக்கட்சியை விமர்சித்து பேசினார் எடப்பாடி பழனிச்சாமி
முக்கிய அம்சங்கள்:
தேமுதிக வாக்கு சதவீதம்
எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
அங்கீகாரம் பெற்ற விசிக கட்சிக்கு வெறும் 8 தொகுதிகளை தான் திமுக வழங்கியுள்ளது. அதே சமயம் புதிதாக திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவிற்கு பத்து தொகுதிகள் மட்டுமல்லாமல் ஒரு ராஜ்யசபா சீட்டையும் வழங்கியிருக்கின்றனர். இது அநியாயம் என எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பேசி வந்தார். இதனைத்தொடர்ந்து தேமுதிகவை அங்கீகாரம் இல்லாத கட்சி, அரை சதவீதம் தான் வாக்கு வங்கி வைத்திருக்கின்றனர் என தொடர்ந்து விமர்சித்து வருகின்றார் எடப்பாடி பழனிச்சாமி.
அதே சமயம் 2 % வாக்கு வங்கி வைத்திருக்கும் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு குறைவான சீட் வழங்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இவரின் இந்த பேச்சை கேட்ட அதிமுக ஆதரவாளர்கள் சிலர், எடப்பாடியார் சரியாக தான் சொல்கின்றார் என்கின்றனர் அதே சமயம் பொதுவான சிலர், தேமுதிக கட்சி சமீபகாலமாக பின்னடைவை சந்தித்து வந்தாலும் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த கட்சியாகும். அக்கட்சி தற்போது பலம் வாய்ந்த திமுக கூட்டணியில் இணைந்திருப்பதால் அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது எனவும் சொல்கின்றனர்.
கண்டிப்பாக அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பத்து தொகுதிகளில் தேமுதிக தங்களின் பலத்தை காட்டி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பார்கள் என்கின்றனர் சிலர். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சிற்கு பலதரப்பட்ட கருத்துக்கள் வருகின்றன. ஆனால் பொதுவான கருத்தாக இருப்பது ஒன்றே ஒன்று தான். தேமுதிகவிற்கு பத்து சீட் வழங்கியது எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இன்னும் கூடுதல் தொகுதிகளை வழங்கியிருக்கலாம் என்பது தான் பொதுவான கருத்தாக இருக்கின்றது.
ஏனென்றால் அவர்கள் நீண்ட காலமாக திமுக கூட்டணியில் தொடர்ந்து வருகின்றனர். எனவே அவர்களுக்கு குறைவான சீட்களை வழங்கிவிட்டு புதிதாக சேர்ந்த தேமுதிகவிற்கு அதிக தொகுதிகளை கொடுத்தால் சரியாக இருக்குமா ? என்பது தான் பலரது கேள்வியாக இருந்து வந்தது. இதை தான் எடப்பாடி பழனிசாமியும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.
ஆனால் அவர் அத்துடன் தேமுதிகவையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். கடந்த சில தேர்தல்களை விட இந்த தேர்தலில் தேமுதிக கண்டிப்பாக சிறப்பாக செயல்படும் என்ற கருத்துக்கள் ஒருபக்கம் இருந்து தான் வருகின்றது. ஆனால் அவர்களை காட்டிலும் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு குறைவான சீட் வழங்கியது தான் தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது.
தேமுதிக, திமுக கூட்டணியா செல்வப் பெருந்தகை சொன்னது என்ன?
இருப்பினும் இதுகுறித்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தான் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் திமுக கூட்டணியில் இருப்பவர்கள் இதையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். தேமுதிகவும் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி தேடும் வகையில் உழைத்து வருகின்றனர். தீவிரமான பரப்புரையிலும் வாக்கு சேகரிப்பிலும் அவர்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
