Edappadi Palanisamy Campaign,நான்கு நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டோம்..ஆனால் திமுக 25 நாட்களாக நடத்தி வருகின்றனர் : எடப்பாடி பழனிச்சாமி – finished constituency and alliance talks within four days says edappadi palanisamy

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை செய்து வருகின்றார். தற்போது சென்னை ஆலந்தூரில் பரப்புரை செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து தன் கருத்தினை கூறியுள்ளார்

முக்கிய அம்சங்கள்:

நான்கு நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தது

எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

edappadi palanisamy about alliance talks
அதிமுக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டது. அதிமுக கூட்டணியில் ஒரு சில தினங்களுக்கு முன்பு வரை தொகுதிப்பங்கீடு பேச்சுவார்தையையே துவங்காமல் இருந்தனர். அதற்குள் என்ன அவசரம், இன்னும் தேர்தலுக்கு நாள் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பேச்சுவார்த்தையை துவங்குவோம் என கூறி வந்தார்கள் அதிமுக கூட்டணியை சேர்ந்தவர்கள்.அதுபோல தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நான்கு நாட்களில் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் வரை அதிமுக அறிவித்துவிட்டனர். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி இன்றைய பரப்புரையில் பேசினார். கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார் எடப்பாடி பழனிச்சாமி. மைலாப்பூரில் துவங்கிய அவரது பரப்புரை தொடர்ந்து பல இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
இன்று சென்னை ஆலந்தூரில் பரப்புரை செய்து வருகின்றார் எடப்பாடி பழனிச்சாமி. அந்த பரப்புரையில் தான் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதாவது திமுகவினர் தொடர்ந்து கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 25 நாட்களை கடந்தும் அவர்களது கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு முடிவிற்கு வரவில்லை.
ஆனால் நாங்கள் நான்கே நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டோம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. என்னதான் கூட்டணியை பிரிப்பது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவை கேட்டு கேட்டு செய்கின்றார் என விமர்சனங்கள் வந்தாலும் நான்கே நாட்களில் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தது. கடந்த வாரம் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் டெல்லி சென்றார்கள்.
இதை திமுகவினர் கடுமையாக விமர்சித்தார்கள். அமித்ஷாவை கேட்டு தான் அதிமுக செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் தொகுதிகளை கூட தீர்மானிக்க முடியாத நிலையில் அதிமுக இருக்கின்றனர் என விமர்சித்தார்கள். அதனைத்தொடர்ந்து கூட்டணி காட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வந்ததையும் திமுக கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இப்படியான நிலையில் அதிமுகவினர் பதிலுக்கு திமுக தனது கூட்டணி காட்சிகளை விழுங்கி வருகின்றனர். உதய சூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமாறு கூட்டணி கட்சிகளை வறுபுறுத்தி வருகின்றனர் என பேசி வருகின்றனர். இவ்வாறு கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பல குழப்பங்கள் இருந்து தான் வருகின்றன. ஆனாலும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நான்கே நாட்களில் முடிந்துவிட்டது.
இந்த கூட்டணியில் இருந்து கிருஷ்ணாசாமியின் புதிய தமிழகம் கட்சி விலகினார்கள். தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கிருஷ்ணசாமி கூட்டணியில் இருந்து விலகினார். அதைப்போல திமுக தரப்பில் வேல்முருகன் கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். அவரும் தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு இல்லாமலும் அவரின் கோரிக்கைகளை திமுக நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி வழங்கவில்லை என்பதாலும் விலகினார்.
இவ்வாறு இரு கூட்டங்களில் இருந்தும் ஒரு கட்சி விலகிவிட்டனர். ஆனால் அதிமுக கூட்டணியை ஒப்பிடும்போது திமுகமிகப்பெரிய கூட்டணியாக உள்ளது. கிட்டத்தட்ட இருபதிற்கும் மேற்பட்ட கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கின்றனர். எனவே இருபது கட்சிகளிடமும் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காலம் எடுக்கும்.

ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக …எழுச்சி பெறுமா கூட்டணி?

ஆனால் அ திமுக கூட்டணி யில் அப்படி இல்லை. திமுக கூட்டணி கட்சிகளை விட அதிமுக கூட்டணியில் குறைவான கட்சிகள் தான் இருக்கின்றன. இதன் காரணமாக கூட நான்கே நாட்களில் பேச்சுவார்த்தை முடித்திருக்கலாம் என தெரிகின்றது. ஆனால் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய குழப்பங்களும் கருத்து வேறுபாடும் உள்ளது என்பதனையும் மறுக்க முடியாது.