Edappadi Palanisamy Mylapore Campaign,மயிலாப்பூரில் தமிழிசை போட்டியா ? பாஜக தொகுதியிலிருந்து பிரச்சாரத்தை துவங்கிய எடப்பாடி பழனிச்சாமி – edappadi palanisamy started his campaign in bjp constituency mylapore

எடப்பாடி பழனிச்சாமி இன்று மைலாப்பூரில் பிரச்சாரத்தை துவங்குகிறார். பாஜக தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் தமிழிசை போட்டியிட இருப்பதாக தகவல்

முக்கிய அம்சங்கள்:

மைலாப்பூரில் போட்டியிடும் தமிழிசை ?

எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை

edappadi palanisamy campaign in mylapore
எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை துவங்குகிறார். மயிலாப்பூர் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது பிரச்சாரத்தை துவங்குகிறார். முதலில் அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை செய்தியாளர்களின் முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இம்முறை அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட அக்கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து அமமுகவிற்கு 11 தொகுதிகளும், பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகளும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. இதில் இன்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்யும் மயிலாப்பூர் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இதற்கிடையில் பாஜகசார்பாக மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர் யார் என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது. மேலும் பாஜக சார்பாக மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வமாக எந்த ஒரு தகவலும் இல்லை.
இன்று தான் மயிலாப்பூர் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது உறுதியாக தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து இந்த தொகுதியில் பாஜக சார்பாக தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுவதாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தமிழிசை சௌந்தர்ராஜனிடம் கேட்கப்பட்டது. எந்த தொகுதியில் நீங்க போட்டியிடுகின்றீர்கள் என தமிழிசை சௌந்தர்ராஜனிடம் கேட்டதற்கு அவர், இந்த தொகுதி பாஜக தொகுதி, அந்த தொகுதி அதிமுக தொகுதி என்பதெல்லாம் கிடையாது. அனைத்து தொகுதியும் தேசிய ஜனநாயக கூட்டணியுடைய தொகுதிகள் தான்.
தொகுதிப்பங்கீட்டில் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் தான் பலமாக இருக்கின்றோம். மேலும் கட்சி எந்த தொகுதியை சொல்கிறார்களோ அந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்றார் தமிழிசை சௌந்தரராஜன். கட்சியின் தலைமை நான் எந்த தொகுதியில் போட்டியிடப்போகின்றேன் என்பதனை அறிவிப்பார்கள். அவர்கள் அறிவிக்கும் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என கூறியிருக்கின்றார்.
ஆனால் உறுதியான இந்த தொகுதியில் தான் போட்டியிடுவேன் என கூறவில்லை. இதனிடையே இன்று எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை செய்யும் தொகுதியான மயிலாப்பூரில் தான் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட போகின்றார் என்ற ஒரு தகவல் தீயாய் பரவி வருகின்றது. விரைவில் பாஜக வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது தான் பாமக தங்கலாது வேட்பாளர்களை அறிவித்து இருக்கின்றனர்.
முதல்கட்ட வேட்பாளர்களை அன்புமணி அறிவித்துள்ளார். இனி அடுத்தடுத்து மற்ற கூட்டணி கட்சிகளும் தங்களது தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இதற்கு முன்பே தமிழிசையிடம் எந்த தொகுதியில் போட்டியிட இருக்கின்றீர்கள் என பலமுறை கேட்கப்பட்டது. அதற்கு கட்சி எந்த தொகுதியை சொல்கிறார்களோ அந்த தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாக கூறி வருகின்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
தற்போதும் கூட இதே பதிலை தான் அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மைலாப்பூரில் பிரச்சாரத்தை துவங்கும் எடப்பாடி பழனிச்சாமி மைலாப்பூரில் அமைந்திருக்கும் கபாலீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு பரப்புரையை துவங்குகிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்காக எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ளும் முதல் பரப்புரை இது என்பதால் அதிக கவனம் பெரும் பரப்புரையாக இது இருக்கின்றது.

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்…யார் இந்த தனபால்?

மேலும் இந்த பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த தொகுதியில் போட்டியிடப்போகும் வேட்பாளர் குறித்து ஏதேனும் சொல்கிறாரா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். என்னதான் பாஜக தொகுதியாக மைலாப்பூர் இருந்தாலும் அங்கு யார் போட்டியிட போகின்றார்கள் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும் என்ற கணிப்பும் இருப்பது குறிப்பிடத்தக்கது.