தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.. தவெக தலைவர் திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் பிரதான கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனால் தவெக தலைவர் விஜய் பெரியளவில் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.. விஜய் இதுவரை, பெரம்பூர், திருச்சி கிழக்கு, நெல்லை ஆகிய இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்துள்ளார்..
இந்த சூழலில் தவெக தலைவர் விஜய் இன்று காரைக்குடியில் பிரச்சாரம் செய்ய உள்ளார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்ற அவர் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக காரைக்குடி வழியாக செல்கிறார்.. அப்போது வழி நெடுகிலும் தவெக தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.. பூக்களை தூவியும், மாலைகள் போட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..
தொடர்ந்து காரைக்குடி வந்தடைந்த விஜய் மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் ரோடு ஷோ மேற்கொண்டார். வாகனத்தில் இருந்து இறங்கிய விஜய் பாதுகாவலர்கள் சூழ சைக்கிள் ஓட்டி சென்றார். அப்போது விஜயை தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சூழ்ந்தனர். இதனால் கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில் காரைக்குடியில் பிரச்சாரம் செய்யமலே விஜய் திரும்ப சென்றார்.. காரைக்குடியில் தவெக வேட்பாளரை ஆதரித்து விஜய் பிரச்சாரம் செய்யவிருந்தார்.. காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் அருகே மதியம் 12 மணி முதல் 2.30 மணி முதல் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.. ஆனால் காரைக்குடியில் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி அளித்த நேரத்திற்கு பிறகே விஜய் நிகழ்விடத்திற்கு சென்றார்..
பரப்புரைக்கு தாமதமாக வந்த நிலையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் விஜய் பரப்புரை செய்யாமலே திரும்பி சென்றார்.. காலையில் இருந்து காத்திருந்த ஆயிரக்கணக்கன தவெக தொண்டர்கள் விஜய் உரையாற்றமல் சென்றதால் கடும் ஏமாற்றமடைந்தனர்..
