தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திமுக, ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த தேர்தலில் புதிதாக களம் காணும் தவெகவும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிப்போம் என்று அக்கட்சி தலைவர் விஜய் கூறி வருகிறார்.. தவெக சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை சமீபத்தில் அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.. விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.. கடந்த 30-ம் தேதி பெரம்பூரில் விஜய் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.. அன்றைய தினமே பெரம்பூரில் இருந்து தனது பிரச்சாரத்தையும் விஜய் தொடங்கினார்..
இதை தொடர்ந்து திருச்சியிலும், புதுச்சேரியில் மட்டுமே விஜய் பிரச்சாரம் செய்துள்ளார்.. மற்ற கட்சிகள் தலைவர்கள் பம்பரமாக சுழன்று பிரச்சாரம் செய்து வரும் நிலையில் விஜய்யின் தேர்தல் பிரச்சாரம் இன்னும் பெரிதாக சூடுபிடிக்கவில்லை.. ஆனால் தங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று தவெகவினர் கூறி வருகின்றனர்..
இந்த நிலையில் 2 தொகுதிகளில் வேட்பாளர்களை தவெக மாற்றி உள்ளது.. அதன்படி ஊத்தங்கரை மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தவெக மாற்றி உள்ளது. குமரவேல்-க்கு பதிலாக தவெக சார்பில் ஊத்தங்கரை தொகுதியில் இளையராஜா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஓசூர் தொகுதியில் அம்ரிஷ்-க்கு பதிலாக தவெக சார்பில் வேந்தர் கரசன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்..
Read More : மீண்டும் ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் எல்லாத்தையும் மாற்றிய விஜய்..! வேட்பு மனுவில் 3-வது முறையாக திருத்தம்..!
