H .raja About Vijay,திருமாவளவன் கட்சியின் வாக்குகளை தான் தவெக பிரிக்கும்..திமுக கூட்டணியை தான் விஜய்யின் வருகை பாதிக்கும் : எச்.ராஜா – h.raja says tvk vijay will break thirumavalavan party votes

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தவெக தலைவர் விஜய் குறித்து பேசியிருக்கிறார். தவெக விஜய் திருமாவளவன் வாக்குகளை தான் பிரிப்பார் என அடித்து கூறியிருக்கின்றார் எச்.ராஜா. மேலும் விஜய்யின் வருகை திமுகவிற்கு ஆபத்து எனவும் பேசினார்

முக்கிய அம்சங்கள்:

திருமாவளவன் வாக்குகளை விஜய் பிரிப்பார்

எச்.ராஜா கருத்து

h.raja about vijay and thirumavalavan
இந்த தேர்தலில் தவெக என்ற புதிய கட்சி களமிறங்கவுள்ளது. எனவே விஜய்யின் தலைமையிலான தவெக கட்சியின் வருகை யாருக்கு பாதிப்பை கொடுக்கும். திமுகவின் வாக்குகளை பிரிக்குமா ? அல்லது அதிமுக வாக்குகளை பிரிக்குமா ? எந்த கூட்டணிக்கு தவெக தலைவலியாக அமையும் என்ற விவாதங்கள் போய்க்கொண்டு இருக்கின்றன. தவெகவினர் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்போம் என நம்பிக்கையாக கூறி வருகின்றனர்.அப்படி ஆட்சியை பிடிக்கவில்லை என்றாலும் தவெக திமுகவிற்கும் அதிமுகவிற்கும் கடும் போட்டியாக அமையும் என்பதே கணிப்புகளாக இருந்து வருகின்றது. தொடர்ந்து திமுகவினர் தவெக கட்சியால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றே சொல்கின்றனர். அதைப்போல அதிமுகவினர் எங்களுக்கும் திமுகவிற்கும் தான் போட்டி என்கின்றனர்.
இருந்தாலும் தவெக திமுகவின் வாக்குகளை தான் பிரிப்பார்கள் என அதிமுக கூட்டணியில் இருக்கும் டிடிவி தினகரன் உட்பட சிலர் கூறி வருகின்றனர். அதே கருத்தை தான் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்து இருக்கின்றார். அதாவது தவெக என்ற கட்சியால் திமுகவிற்கு தான் பாதிப்பு. விஜய் திமுக கூட்டணியின் வாக்குகளை தான் பிரிப்பார். மிக குறிப்பாக திருமாவளவன் கட்சி வாக்குகளை தான் விஜய் பிரிப்பார் என கூறியிருக்கின்றார்.
அதோடு மட்டுமல்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய்யால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. அதே சமயம் விஜய்யின் வருகை முழுக்க முழுக்க திமுகவிற்கு தான் ஆபத்தாக அமையவுள்ளது என குறிப்பிட்டு பேசியிருக்கிறார் எச்.ராஜா. ஆனால் எதன் அடிப்படையில் விஜய் திருமாவளவனின் வாக்குகளை பிரிப்பார் என எச்.ராஜா விளக்கம் கொடுக்கவில்லை. திமுக வாக்குகளை பிரிப்பார் என்று இல்லாமல் குறிப்பாக திருமாவளவனின் வாக்குகளை விஜய் பிரிப்பார் என ஹெச்.ராஜா கூறியதற்கு என்ன காரணம் என மக்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இருப்பினும் திருமாவளவன்என்பவருக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. விடுதலை சிறுத்தை கட்சி மக்களின் வரவேற்பை பெற்ற கட்சியாகும். அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு திமுக கூட்டணியில் குறைவான தொகுதிகள் தான் வழங்கப்பட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. எதிர்க்கட்சியான அதிமுகவினரே திருமாவளவனின் பலம் குறித்து பேசி வருகின்றனர். அவருக்கு இன்னும் கூடுதல் தொகுதிகள் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்கின்றனர்.
அப்படி இருக்கையில் விஜய் திருமாவளவனின் வாக்குகளை குறிப்பாக பிரிப்பார் என்ற கருத்தில் பலருக்கு உடன்பாடு இல்லாதது போல தான் தெரிகின்றது. ஒட்டுமொத்தமாக விஜய்யால் திமுகமற்றும் அதிமுக என இரு கூட்டணியின் வாக்குகளும் சிதறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இரு கூட்டணிக்கும் தவெக கடும் போட்டியாக நிலவும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பலரது கணிப்பாகவும் உள்ளது.

விஜய் கட்சியில் செங்கோட்டையன்! அதிமுக வாக்குகள் எப்படி பாதிக்கும்- மக்கள் கருத்து இதுதான்

ஆனால் குறிப்பாக திருமாவளவனின் வாக்குகளை தான் விஜய் பிரிப்பாரா ? என தெரியவில்லை. இந்நிலையில் திருமாவளவன் இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட இருந்தார் திருமாவளவன். ஆனால் திடீரென தான் இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றார். தன் அரசியல் யுக்தியில் மாற்றம் செய்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றார் திருமாவளவன். இது தான் தற்போது பரபரப்பான விவாதப்பொருளாக மாறியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது