.இந்த தீவியில் இருந்து தான் 80 % எண்ணெய் மற்ற நாடுகளுக்கு கொண்டுசெல்லப்படுகின்றது. தற்போது அந்த கார்க் தீவில் தான் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் ஈரானின் சில முக்கியமான பகுதிகளிலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். முக்கிய பாலங்கள் மீதும் அமெரிக்கா தற்போது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஈரான்போரால் உலகமெங்கும் தட்டுப்பாடுகள் அதிகரித்து இருக்கின்றன. இந்த சமயத்தில் உலகமெங்கும் கொண்டுசெல்லப்படும் எண்ணெய் கிடங்கான கார்க் தீவில் அமெரிக்கா தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்றே சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் ஏற்கனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கார்க் தீவை தகர்ப்பதாக பலமுறை அச்சுறுத்தி வந்தார். இதுகுறித்து அவர் சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டார். இந்த சமயத்தில் அமெரிக்கா ஈரான் கார்க் தீவு மீது கடும் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் ஈரான் அரசு மீது ட்ரம்ப் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையில் நாங்கள் நினைத்தால் ஈரான் நாட்டை ஒட்டுமொத்தமாக ஒரே இரவில் அழித்துவிடுவோம். அதுவும் செவ்வாய்க்கிழமை இரவே அது நடக்கலாம் என்றும் எச்சரித்து கேடு விதித்தார் டொனால்ட் ட்ரம்ப். மேலும் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்தார். அப்படி இல்லையென்றால் அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என ஈரான் நாட்டை கடுமையாக ட்ரம்ப்எச்சரித்தார்.
அவரின் கெடு முடிய ஒரு சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் தற்போது கார்க் தீவில் தாக்குதல் அரங்கேறியிருக்கின்றது. இது சாதாரண தாக்குதலாக இல்லாமல் பலத்த தாக்குதலாக தெரிகின்றது. இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தான தகவல்கள் கிடைக்கவில்லை இந்நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்து வருகின்றனர். அமேரிக்கா கூட தற்காலிகமாக போரை நிறுத்தக்கொடி ஈரானை வலியுறுத்தியது.
ஆனால் ஈரான் தற்காலிகமாக அல்லாமல் நிரந்தரமான போர் நிறுத்தம் வேண்டும் என கூறினார்கள். இது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை அதிருப்தியடைய செய்தது. இதனைத்தொடர்ந்து தான் ட்ரம்ப் அடுத்தடுத்து ஈரான் நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்தது வந்தார். இந்த போரால் பல நாடுகள் அவதிப்பட்டு வருகின்றனர். உடனடியாக இந்த போரை நிறுத்த வேண்டும் என பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் தற்காலிகமாக போரை நிறுத்த அமெரிக்க முன் வந்தபோதிலும் ஈரான் அதற்கு செவிசாய்க்கவில்லை. இப்படியான நிலையில் இந்த போர் தற்போதைக்கு முடிவிற்கு வருவதாக தெரியவில்லை. மேலும் வேடமெடுத்து இருப்பதாகவே தெரிகின்றது.விரைவில் ஈரானும் அமெரிக்காவும் சமரசமாக சென்றால் தான் உலக நாடுகளுக்கு நன்மையாக இருக்கும். அதற்கான முயற்சிகளை தொடர்ந்து பல நாடுகள் மேற்கொண்டு வருகின்றனர்
