அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கூடுதல் தொகுதிகளை கேட்டு வந்த புரட்சி பாரதம் கட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறியிருக்கின்றார்
முக்கிய அம்சங்கள்:
புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி
நம்பிக்கை கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி
மேலும்அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடவும் அக்கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி முடிவெடுத்திருக்கிறார். இந்த முடிவு இறுதியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஜெகன்மூர்த்தி. அப்போது ,அதிமுக கூட்டணியில் புதிய பாரதம் கட்சி தொடர்ந்து நீடித்துக்கொண்டு வருகின்றோம். அதிமுக எங்களுக்கு ஒரு தொகுதியை தான் ஒதுக்கினார்கள்..
வேலூர் மாவட்டம் கேவி குப்பம் தொகுதியை எங்களுக்கு வழங்கினார்கள். அந்த தொகுதியில் தான் உறுப்பினராக பணியாற்றி வருகின்றேன். அதே தொகுதியை தான் எங்களுக்கு ஒதுக்கினார்கள். ஆனால் ஒரு தொகுதி போதாது ,கூடுதலாக தொகுதிகள் வேண்டும் என எங்கள் கட்சியின் நிர்வாகிகள் கேட்டு வந்தனர். எனவே இதுகுறித்து எங்கள் கட்சிக்குள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
அந்த பேச்சுவார்த்தையில் பல கருத்துக்கள் சொல்லப்பட்டது. இறுதியாக முடிந்தவரை கூடுதல் தொகுதிக்காக முயற்சி செய்து பார்ப்போம். ஒருவேளை கூடுதல் தொகுதிகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட இதே கூட்டணியில் தொடரலாம் என்ற ஒருமித்த முடிவிற்கு வந்தோம். இதைத்தொடர்ந்து இன்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தோம்.
அந்த சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி எங்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் பேசி ஆறுதல் கூறினார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தான் வெற்றிபெறப்போகின்றோம். அதில் எந்த சந்தேகமும் இல்லை.வெற்றிபெற்ற பிறகு நாம் பார்த்துக்கொள்ளலாம். நாங்கள் ஒருபோதும் எந்த விதத்திலும் புரட்சி பாரதம் கட்சியை கைவிடமாட்டோம் என ஆறுதல் கூறியதாக ஜெகன்மூர்த்தி பேசினார்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியதற்கு பிறகு எங்களுடைய தொண்டர்களும் நிர்வாகிகளும் சமாதானமாகி இருக்கின்றனர். தற்போது தனி சின்னத்திற்கு வாய்ப்பில்லை என்பதால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றோம். நான் தான் வேட்பாளராக களமிறங்க உள்ளேன் என தெரிவித்தார் ஜெகன் மூர்த்தி.
இந்நிலையில் புரட்சி பாரதம் கட்சியினர் நேற்று வரை வருத்தத்தில் இருந்தனர். ஆனால் இன்று அவர்களை சமாதானப்படுத்தி கூட்டணியில் தொடர செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இருப்பினும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தனித்து போட்டியிட முடிவெடுத்து இருக்கின்றார்.
இதன் காரணமாக அதிமுக கூட்டணி வாக்குகள் தான் பிரியும். இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணசாமியிடமும் எடப்பாடி பழனிச்சாமி சுமுகமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கலாமே என்பது தான் கேள்வியாக உள்ளது. மறுபக்கம் அதிமுக புதிய தமிழகம் கட்சியை விட்டவாறு புரட்சி பாரதம் கட்சியை விடவில்லை.
அதிமுகவை முடிச்ச கட்சி பாஜக – செல்வப்பெருந்தகை பேட்டி..!
சரியான முறையில் பேச்சுவார்த்தையை நடத்தி அவர்களை சம்மதிக்க வைத்துவிட்டனர். ஒருவேளை புரட்சி பாரதம் கூட்டணியை விட்டு விலகுவதாக தெரிவித்து இருந்தால் மேலும் அதிமுகவின் வாக்குகள் பிரிய கூடும். அதனை அதிமுக தடுத்துவிட்டதாக அக்கட்சியின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
