எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
இதற்கிடையில் கனிமொழி குறித்தும் கடுமையாக பேசினார் எடப்பாடி பழனிசாமி. கனிமொழி மீண்டும் ஜெயிலுக்கு போய்விடுவார் என எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கின்றாராம். இதுகுறித்து கனிமொழி எடப்பாடி பழனிசாமிக்கு தனது பதிலடியை கொடுத்திருக்கின்றார். கனிமொழி தனது பரப்புரையில், எடப்பாடி பழனிச்சாமி தரம் தாழ்ந்து என்னைப்பார்த்து நீங்க மறுபடியும் ஜெயிலுக்கு போயிடுவீங்க என சொல்லியிருக்கின்றார்.
என் மீது பொய் வழக்கு போடப்பட்டது உண்மை தான். அந்த வழக்கை எதிர்கொண்டு என் மீது குற்றமில்லை என்பதை நிரூபித்து இன்று உங்கள் முன்பு நிற்கின்றேன். நான் நினைத்திருந்தால் என் மீது பொய் வழக்கு போட்டவர்கள் மீது வழக்கு போடமுடியும். ஆனால் அதனை நான் செய்யவில்லை. என் மீதான வழக்கு நிலுவையில் இல்லை. குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு வெளியே வந்துள்ளேன்.
கனிமொழி பதிலடி
ஆனால் அவர் மீது வழக்குகள் உள்ளது. அவர் என்னைப்பார்த்து நீங்கள் இப்படி பேசினால் ஜெயிலுக்கு போய்விடுவீர்கள் என சொல்கின்றார். அவர்களை எதிர்ப்பது பேசினால் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம் என மிரட்டுகிறார்கள். இதைத்தான் பாஜகவும் செய்து வருகின்றனர். அவர்களை எதிர்ப்பவர்கள் மீது வழக்கு போட்டு, வருமானவரித்துறை போன்ற ரைடுகளை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என தெரிகின்றது.
அதிமுகவை அமித்ஷா திமுகவாக மாற்றிவிட்டார்கள். என்னை ஜெயிலுக்கு போய்விடுவார் என சொல்லி மிரட்டபார்க்கின்றனர். நான் கலைஞர் கருணாநிதியின் மகள். இந்த சலசலப்பிற்கு எல்லாம் அஞ்சமாட்டேன். மிரட்ட மிரட்ட நான் எதிர்த்துக்கொண்டு தான் இருப்பேன், விமர்சனம் செய்துகொண்டு தான் இருப்பேன் என ஆவேசமாக பேசினார் கனிமொழி எம்.பி. இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனங்களுக்கு கனிமொழி எம்.பி பதிலடி கொடுத்திருக்கின்றார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி பயத்தால் தான் இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றார் என தொடர்ந்து திமுகவினர் கூறி வருகின்றனர். அதோடு அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை திமுக காப்பியடித்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். இதற்கும் கனிமொழி பதிலடி கொடுத்திருக்கின்றார். பரிட்சையில் பாஸ் மார்க் வாங்குபவர்களை பார்த்து தான் காப்பியடிப்பார்கள். ஆனால் நீங்கள் தேர்தலில் தோல்வியை சந்திக்கபோறவர்கள்.
தேர்தல் வாக்குறுதி விமர்சனம்
உங்களை பார்த்து ஏன் காப்பியடிக்க வேண்டும் என கனிமொழி பதிலடி கொடுத்திருக்கின்றார்.தோல்வி பயத்தால் தான் எடப்பாடி பழனிச்சாமி நான் ஒரு முதல்வராக இருந்தவர், எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் என்பதையெல்லாம் மறைந்துகொண்டு பேசிக்கொண்டு இருக்கின்றார். அவருடைய தரம் தெரியாமலே அவர் பேசிக்கொண்டு இருக்கின்றார் என கூறினார் கனிமொழி.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து பதிலடி கொடுத்து வருகின்றார் கனிமொழி. இவ்வாறு திமுக மற்றும் அதிமுக பரப்புரையில் கடும் மோதல்கள் வெடித்து வருகின்றது. ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில் இனி வரும் நாட்களில் மேலும் பரப்புரைகள் சூடுபிடிக்கும், பல கருத்து மோதல்கள் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
