தவெக தலைவர் விஜய் கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு திமுகவும் தான் ஒரு காரணம் என குற்றம்சாட்டி பேசியிருந்தார்.. தற்கு திமுக எம்பி கனிமொழி பதிலளித்துள்ளார். மேலும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்தும் பேசினார் கனிமொழி
முக்கிய அம்சங்கள்:
தவெக தலைவர் விஜய் குற்றசாட்டு
கனிமொழி பதிலடி
குறிப்பாக டெல்லி செல்லும் அளவிற்கு அவருக்கு சொந்த பிரச்சனை இல்லை. மேலும் நேரடியாக டெல்லிக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. டெக்நாலஜி மிகப்பெரிய அளவில் வளர்ந்துவிட்டது. இங்கிருந்து மின்னஞ்சல் மூலமே பிரதமருக்கு தகவல் தெரிவிக்கலாம், அவரிடம் பேசலாம். ஏற்கனவே தமிழக முதல்வர் இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கின்றார். ஒன்றிய அரசால் தான் இந்த நிலை வந்துள்ளது.
சிலிண்டர் குறித்து அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன் காரணமாக தான் இந்தியாவில் தற்போது இந்த நிலை உள்ளது என்றார் கனிமொழி. அதோடு அதிமுகவின் தேர்தல் அறிக்கையையும் விமர்சித்துள்ளார் கனிமொழி. அதிமுக அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றியதே இல்லை. அதோடு அவர்கள் ஆட்சிக்கும் வர வாய்ப்பில்லை. எனவே அவர்களின் தேர்தல் அறிக்கை பற்றி யாருமே பேசவில்லை என்றார் கனிமொழி.
இவ்வாறு அதிமுக மற்றும் தவெக என இரு கட்சியின் விமர்சனங்களுக்கு கனிமொழி பதிலடி தந்து வருகின்றார். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு திமுகவும் தான் ஒரு காரணம் என குறிப்பிட்டது பேசும்பொருளாக மாறியது. சிலிண்டர் பிரச்சனைக்கும் திமுகவிற்கும் என்ன சம்மந்தம் என திமுகவை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். மேலும் அமைச்சர் ராஜேந்திரன் விஜய் பாஜகவின் பி டீம் என கடுமையாக விமர்சித்தார்.
இதையெல்லாம் தாண்டி இன்று தென்காசியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பரப்புரை செய்யும்போது ,மோடி ஜி where is lsg என கூறினார்.இதன் மூலம் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனைக்கும் தமிழக அரசிற்கும் தொடர்பு இல்லை என்றே தெரிகின்றது. தமிழக அரசும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சரி செய்ய போராடி வருவதாக கனிமொழி கூறியிருக்கின்றார்.
விஜய்க்கு அந்த தகுதி இல்ல – திண்டுக்கல் லியோனி பேட்டி..!
இதுகுறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார். நாடு முழுவதும் இந்த பிரச்சனை இருந்து வருகின்றது. ஒன்றிய அரசு கேஸ் பற்றி கவலைப்படாமல் இருந்ததால் தான் இந்த நிலை உள்ளது என கூறினார் கனிமொழி. மேலும் இந்த பிரச்சனை தமிழகத்தில் மட்டும் இல்லை, ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் உள்ளது. அப்படி இருக்கையில் இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு எப்படி காரணமாக இருக்கும் என்பது தான் திமுக ஆதரவாளர்களின் கருத்தாக இருக்கின்றது.
