திமுக சார்பாக கருணாஸ் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகின்றார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் திமுகவின் வெற்றிவாய்ப்பு குறித்து பேசியிருக்கிறார். இல்லத்தரசி திட்டம் குறித்தும் கருணாஸ் பேசியிருக்கிறார்
முக்கிய அம்சங்கள்:
இல்லத்தரசி திட்டம் போதும்
திமுக வெற்றிவாய்ப்பு குறித்து கருணாஸ்
கனிமொழிதலைமையிலான குழு தயார் செய்திருந்த தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டார். பல நாட்களாக சுற்று பயணம் மேற்கொண்டு மக்களின் தேவைகளை கேட்டறிந்து இந்த தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டதாக தகவல். இதனைத்தொடர்ந்து முக ஸ்டாலின் அவர்கள் திமுகவின் தேர்தல் அறிக்கையில் புதிதாக இல்லத்தரசி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இல்லத்தரசிகளுக்கு 8000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்.
அதை பயன்படுத்தி அவர்களுக்கு பிடித்த பிராண்டில் வீடு உபயோக பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாங்கள் அறிவித்த திட்டத்தையே காப்பி அடித்து திமுகவினர் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு இருக்கின்றனர் என கூறினார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுகவின் தேர்தல் அறிக்கையை காப்பி பேஸ்ட் செய்து திமுகவினர் வெளியிட்டதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார்.
இந்நிலையில் கருணாஸ்பேசுகையில் இல்லத்தரசி என்ற ஒரு திட்டமே போதும் திமுக மீண்டும் வெற்றிபெற என கூறியிருக்கின்றார். இல்லத்தரசி என்ற ஒரு திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த திட்டத்தினால் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார் கருணாஸ். மேலும் அதிமுகவில் இருந்த கருணாஸ் தற்போது திமுகவில் இணைந்து போட்டியிட இருக்கின்றார்.
இதுகுறித்து பேசுகையில், எம்.ஜி.ஆர் உருவாக்கிய இரட்டை இல்லை தற்போது ஒற்றை இலையாகிவிட்டது. பாஜக கட்சிக்கு அடிமாட்டு விலைக்கு அதிமுக அடமானத்தில் உள்ளது. அதன் காரணமாக அதிமுக கூட்டணி இம்முறை வெற்றிபெற வாய்ப்பே இல்லை. எடப்பாடி பழனிச்சாமி முக்குலத்தோர் சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகங்களை செய்திருக்கின்றார். அதனால் தான் அக்கட்சியில் இருந்து நாங்கள் விலகினோம்.
அதையும் தாண்டி மதசார்பற்ற கூட்டணி மதத்தை வைத்து அரசியல் செய்யும் ஒரு கூட்டத்தை எதிர்க்க தான் திமுகவில் நாங்கள் இணைந்தோம். எங்களுடைய ஒரே நோக்கம் மதசார்பற்ற கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்பது தான். எனவே இந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெரும். தற்போது 524 தேர்தல் வாக்குறுதிகளை திமுகஅறிவித்துள்ளார்கள்.
“பராசக்தியை வைத்து வாக்கு திரட்ட திமுக திட்டம்”- ஆதவ் அர்ஜுனா
மேலும் கடந்த முறை கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கின்றனர். சொல்லாத சில வாக்குறுதிகளையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். இதன் அடிப்படையில் திமுக மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கப்போவது உறுதி என பேசினார் கருணாஸ். குறிப்பாக இல்லத்தரசி திட்டம் மகத்தான ஒரு திட்டம். அந்த திட்டம் ஒன்றே திமுகவை மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்றார் கருணாஸ்.
