திருச்சி மேற்கு தொகுதியில் தான் இம்முறையும் போட்டியிடுகின்றார் அமைச்சர் கே.என் நேரு. இன்று அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த கே.என் நேருவின் முழு சொத்து விவரங்கள் குறித்து வெளியான தகவல்
முக்கிய அம்சங்கள்:
கே.என் நேரு சொத்து விவரங்கள்
வெளியான தகவல்
இதையடுத்து வங்கி கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என்பதனையும் கே.என் நேரு குறிப்பிட்டு இருக்கின்றார்.மொத்தமாக கே.என் நேரு நான்கு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றார். அந்த நான்கு வங்கி கணக்குகளையும் சேர்த்து மொத்தமாக 64 லட்சம் 86 ஆயிரம் ரூபாய் (64 ,86 ,523 /) இருப்பு இருப்பதாக கே.என் நேரு குறிப்பிட்டு இருக்கின்றார்.
அதைத்தொடர்ந்து அவரது மனைவியின் பெயரில் இரண்டு வங்கிகளில் கணக்கு இருக்கின்றதாம். அந்த இரண்டு வங்கி கணக்குகளில் ஒட்டுமொத்தமாக 16 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் பணம் இருக்கின்றதாம். இந்நிலையில் கே.என் நேரு அவர்கள் 40 லட்சம் மதிப்பிலான கார்களை வைத்திருக்கின்றார். இதைத்தொடர்ந்து தங்க நகைகளை பொறுத்தவரையிலும் கே.என் நேரு பத்து சவரன் வைத்திருக்கின்றார். அவரது மனைவியிடம் 200 சவரன் இருக்கின்றதாம்.
கிட்டத்தட்ட இரண்டு கோடி மதிப்பிலான நகைகள் கே.என் நேரு மனைவியிடம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நகைகளை பொறுத்தவரை கே.என் நேருவிடம் ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான நகைகளும் அவரது மனைவியிடம் இரண்டு கோடியே 39 லட்சம் மதிப்பிலான நகைகளுக்கும் இருப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் கே.என் நேருவிடம் விவசாய நிலங்கள் உள்ளதாம். அதன் ஒட்டுமொத்த மதிப்பும் கிட்டத்தட்ட 1 ,00 ,00 ,000 கோடி மதிப்பு இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் அவரது மனைவியின் பெயரிலும் 1 ,00 ,00 ,000 கோடி மதிப்பில் விவசாய நிலங்கள் இருக்கின்றதாம். இதையடுத்து விவசாயம் அல்லாத நிலமாக கே.என் நேருவிடம் 5 ,00 ,000 ரூபாய் மதிப்பில் நிலங்கள் இருப்பதாகவும், அவரது மனைவியிடம் 50 ,000 ,000 ரூபாய் மதிப்பிலான நிலங்களும் இருக்கின்றன.
ஒட்டுமொத்தமாக கே.என் நேருவிடம் 1 ,17 ,57 ,000 ரூபாய் மதிப்பிலான நிலங்கள் இருக்கின்றன. மறுபக்கம் அவரிடத்து மனைவியிடம் 1 ,50 ,00 ,000 ரூபாய் மதிப்பில் நிலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கே.என் நேருவின் சொத்து விவரங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. இன்று தான் கே.என் நேரு தனது தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றார்.
கடந்த இருமுறையை போல இம்முறையும் திருச்சி மேற்கு தொகுதியில் அவருக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கணிக்கப்படுகின்றது. என்னதான் அவர் மீது சில சர்ச்சைகள் சமீபத்தில் இருந்து வந்தாலும் அவரின் வெற்றிவாய்ப்பிற்கு எந்த பாதிப்பும் இல்லை என கருத்துக்கள் வருகின்றன.
VP வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் – பாஜக கணக்கு என்ன?
இந்நிலையில் திருச்சி என்பது திமுகவின் கோட்டை என சொல்லப்படுகின்றது. திருச்சியில் திமுகவினர் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இம்முறையும் திருச்சியில் திமுகவின் ஆதிக்கம் தொடரும் என அங்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கே. என் நேரு உட்பட அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
